அட மீண்டும் மீண்டுமா? அஜித்தின் அடுத்த படத்தினை இயக்க போவது இந்த இயக்குனரா?
Ajith: விடாமுயற்சி படத்தினை முடிக்க போகும் அஜித்தின் அடுத்தக்கட்ட படங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கும் நிலையில் அடுத்த இயக்குனர் யார் என்ற தகவலும் தற்போது கசிந்துள்ள நிலையில் ரசிகர்களே கொஞ்சம் ஆச்சரியமாகி இருக்கும் விஷயம் தான் நடந்து இருக்கிறதாம்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பிப்ரவரிக்குள் படத்தின் ஷூட்டிங்கினை மொத்தமாக முடிக்க வேண்டும் என்று அஜித்தின் தரப்பில் இருந்து ஏற்கனவே கறார் ஆர்டர் வந்துவிட்டதால் அவரின் காட்சிகளும் விரைவாக எடுக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ஷூட்டிங் முடிஞ்சி மிட் நைட் வந்தாலும் கேப்டன் அதை செய்யாம தூங்க மாட்டார்!.. பிரேமலதா சொன்ன சீக்ரெட்!..
இப்படத்தினை முடித்து கொண்டு அஜித், ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் ஒரு முழுநீள காமெடி படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தினை தெலுங்கின் பிரபல மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க இருக்கின்றனர். படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கலாம் என்று தகவல்கள் கசிந்துள்ளது.
இந்நிலையில் அஜித்தின் 64வது படம் குறித்த தகவலும் இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கும் படத்தில் அஜித்தை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அஜித் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் இந்த கூட்டணியில் உருவாகும் 5வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கங்குவா படத்தினை முடித்துவிட்டு சிவாவும், விடாமுயற்சி, ஏகே63ஐ முடித்து விட்டு அஜித்தும் இந்த படத்தில் இணையலாம் என கிசுகிசுக்கப்படுகிறது. அப்போ இந்த முறை எந்த வியாக இருக்கும்னு ரசிகர்கள் இப்போதே மண்டையை குடைய ஆரம்பித்து விட்டனர்.
இதையும் படிங்க: ஜவ்வா இழுக்காதீங்கப்பா.. சட்டு புட்டுனு ஒரு முடிவுக்கு வாங்க.. கல்யாணத்தை முடிச்சிவிடுங்க