
Cinema History
அது ரஜினிக்குதான்… அதுக்கு ஏன் இத்தனை சண்டை அமைதியா இருங்க! சுரேஷ் கிருஷ்ணா பதிலடி!
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்துக்கு ஹிட் படங்களை மட்டுமே கொடுத்த இயக்குனர்கள் மிக சிலரே. அவர்கள் கொடுத்த பிளாப் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படி ஒரு இயக்குனராக ரஜினியின் வளர்ச்சியில் முக்கிய இடம் பிடித்தவர் தான் சுரேஷ் கிருஷ்ணா. அவர் ரஜினியுடன் பணியாற்றிய சம்பவம் குறித்து மனம் திறந்துள்ளார்.
அவர் சமீபத்திய பேட்டியில் இருந்து, ரஜினிகாந்த் எப்போதுமே மாஸ் தான். அப்போது ஒரு படத்தில் நிறைய பாடல்கள் வைக்க முடியும். இப்போது அப்படி செய்யவே முடியாது. போட்டாலும் ஹிட் அடிக்காது. இப்போதைய படங்களில் பாடல்களே இல்லை.
இதையும் படிங்க : அஜித் சொன்னதால்தான் வெங்கட் பிரபுவுடன் இணைந்தாரா விஜய்?.. தெய்வ வாக்கு தல!…
இது நெல்சனுக்கே கஷ்டமாக தான் இருக்கும். வயதுக்கு ஏத்த மாதிரி ஸ்கிரிப்ட் இருக்கணும். ரஜினி சாரோட மாஸ் இருக்கணும். திரைக்கதையை சரியாக இருக்கணும். அவர் வயதும் இருக்கணும். இதை சரியாக கையாண்டால் படம் வெற்றி பெறும்.
பாட்ஷா படத்தினை ஜெய்லருடன் ஒப்பிடுகிறார்கள். அதில் இருக்கும் ஒரே விஷயம் இதில் இருக்கிறது என்றால் ரஜினி சார் தான். பாட்ஷாவில் மிகப்பெரிய ரகசியத்தை ஒளித்து விளம்பர இடைவேளையில் தான் காட்டுவோம். ஜெய்லரில் அந்த நூலும் இருக்கிறது. ஆனால் அதை விடுத்து ஜெய்லர் வேறு, பாட்ஷா வேறு தான்.
ரஜினியின் சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு இன்னமும் சண்டை நடக்கிறது. இது தேவையில்லாத கதை தான். அவருக்கு சூப்பர்ஸ்டார் பட்டத்தை நான்தான் போட்டேன். அது அவரின் அடையாளம். அவருக்கு மட்டும் தான் சொந்தம். அதை பற்றி விவாதிக்க கூட எனக்கு விருப்பமில்லை எனத் தெரிவித்தார்.
ரஜினியின் திரை வரலாற்றில் வெற்றி படமான அண்ணாமலை, பாட்ஷா படங்களை இயக்கி புகழ்பெற்ற சுரேஷ் கிருஷ்ணா பாபா படத்தினை இயக்கினார். மற்ற இரண்டு படங்களுடன் ஒப்பிடும்போது பாபா பிளாப் என்பது குறிப்பிடத்தக்கது.