More
Categories: Cinema History Cinema News latest news

‘பாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார்…’ அது தான் இளையராஜா..!

இளையராஜா சினிமாவிற்குள் எளிதாக நுழைந்துவிடவில்லை. அவரும் கஷ்டப்பட்டுத் தான் வந்து இருக்கிறார். ஆரம்பத்தில் கம்யூனிஸ மேடைகளில் அண்ணனுடன் இணைந்து பாடலுக்கு இசை அமைத்து வந்தார். அவர் இறந்த பிறகு சென்னைக்கு சினிமா ஆசையில் வருகிறார். நிறைய நாடகங்கள், கச்சேரிகளிலும் இசை அமைத்துள்ளார்.

இதையும் படிங்க… முதல்ல என்ன விரட்டி விட்டாங்க!. இப்ப கமலோட முத்தம்!.. நெகிழும் விஜய் சேதுபதி!…

Advertising
Advertising

அதன்பிறகு நீண்ட போராட்டங்களுக்கு மத்தியில் ‘அன்னக்கிளி’ படத்தின் வாய்ப்பு கிடைக்கிறது. படம் வந்ததும் பெரிதாகப் பேசப்படவில்லை. என்ன காரணம்னா புது இசை அமைப்பாளர், புது நடிகர் என்பதால் தான். அப்புறம் ஒவ்வொருவராக படத்தைப் பார்த்து சொல்லச் சொல்ல அன்னக்கிளி படம் பிக்கப் ஆனது.

இந்தப் படத்தின் பாடல்களும் ஹிட் அடிக்க ஆரம்பித்து விட்டன. ஒரு சிலர் பொறாமையில் ‘என்ன பெரிய இளையராஜா? அவர் கிராமத்துக்காரர். அதனால் தெம்மாங்கு பாட்டுக்கு இசை அமைச்சிருக்கார்’னு சொல்லிட்டாங்களாம். அதற்கு இவர் பதிலடி தன் இசையாலேயே கொடுக்க நினைத்தார். அப்போது வந்தது தான் ‘கவிக்குயில்’ படம்.

சிவகுமார் தான் ஹீரோ. அவர் புல்லாங்குழல் பிரியர். கதாநாயகியோ அவரை கண்ணனாக நினைத்துப் பாடுகிறார். இந்தப் பாடலுக்கு ‘ரீதிகௌளை’ என்ற வித்தியாசமான ராகத்தைத் தேர்ந்தெடுத்தார் இளையராஜா. இதை அதுவரை யாரும் பயன்படுத்தியது இல்லை. இந்தப் பாடலை டாக்டர் பாலமுரளிகிருஷ்ணாவை வைத்துப் பாட வைக்கிறார்.

அது தான் ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ பாடல். தன்னை ராதையாகப் பாவித்துக் காதலன் பாடும் பாடல். அதை பாலமுரளி கிருஷ்ணா பாடினார். அதே பாடலை எஸ்.ஜானகியும் பாடியிருந்தார். அது அந்தளவு எடுபடவில்லை. பாலமுரளியின் பாடல் சூப்பர்ஹிட் அடித்தது.

இதையும் படிங்க… ‘மகாராஜா’ படத்துக்கு பிறகு எதிர்காலத்த நினைச்சா பயமா இருக்கு! புலம்பும் நடிகர்

பாடலில் சந்தூர், புல்லாங்குழல் என இரண்டு கருவிகளாலும் இளையராஜா புகுந்து விளையாடி இருப்பார். இன்னும் எந்த ஒரு மேடைக்கச்சேரியாக இருந்தாலும் பக்திப் பாடல்கள் வரிசையில் இந்தப் பாடல் தவறாமல் இடம்பெறுவதுண்டு.

மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

 

Published by
sankaran v

Recent Posts