Connect with us

தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போன பிரபல ஹீரோக்கள் இதோ !!!

Cinema News

தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போன பிரபல ஹீரோக்கள் இதோ !!!

தமிழ் சினிமாவில் ஹீரோவாக மக்கள் மனதில் நிலைத்திருப்பது சாதாரணமான காரியம் அல்ல.முதல் ஓரிரு படங்கள் வெற்றி படங்களாக அமைந்தும் பின் காணாமல் போன நடிகர்கள் பலர் உள்ளனர்.

இந்நிலையில் மக்கள் மனதில் இடம் பிடித்து நிலைக்க தவறிய நடிகர்களை பற்றி பார்க்கலாம் ,

நடிகர் ரவி கிருஷ்ணா : இவர் 2004-ம் ஆண்டு வெளிவந்த “7ஜி – ரெயின்போ காலனி” திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர்.இவரின் இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர்.

பின்னர் சுக்ரன், ஆரண்ய காண்டம் திரைப்படங்களில் நடித்துள்ளார். அனைத்து படங்களும் தோல்வியை தழுவ தமிழ் சினிமாவை விட்டு வெளியேறினார்.

நடிகர் விக்ராந்த் : இவர் 2005 ஆம் ஆண்டு வெளியான கற்க கசடற என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். தமிழ்த் திரைப்பட நடிகரான விஜய், இவரின் தாய்வழி அண்ணன் ஆவார். இதை தொடர்ந்து சில திரைப்படங்கள் நடித்தார் ஆனால் தோல்வியில் தான் முடிந்தது.

தற்போழுது ஹீரோவாக இல்லாமல் அடுத்தடுத்த கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் 2013 ஆம் ஆண்டில், பாண்டிய நாடு என்ற திரைப்படத்தில் ஹீரோவின் நண்பனாக நடித்துள்ளார்.

நடிகர் மகேஷ் : 2010ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் அங்காடித் தெரு என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.இரவும் பகலும் வரும்,புத்தனின் சிரிப்பு என படங்களில்

 நடித்தும் வெற்றி பெறவில்லை.

நடிகர் ஜித்தன் ரமேஷ் : ஜித்தன் ரமேஷ் என்று அழைக்கப்படும் ரமேஷ் சௌத்ரி என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.

இவர் பிரபல தயாரிப்பாளரான ஆர். பி. சௌத்ரியின் மகன் ,நடிகர் ஜீவாவின் அண்ணனும் ஆவார். இவர் 2006 ஆம் ஆண்டு வெளியான ஜித்தன் என்ற படத்தில் நாயகனாக நடித்தார். தொடர்ந்து 12 படங்கள் நடித்தும் படங்கள் வெற்றி பெறவில்லை, பின்னர் 2011 ஆம் ஆண்டு வெளியான வானம் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளரானார்.

நடிகர் வினய் ராய் : வினய் முதலில் பெங்களூரில் மாடலிங் செய்துகொண்டிருந்தார். விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார்.ஜீவாவின் உன்னாலே உன்னாலே என்ற படத்தில் சதா மற்றும் தனிஷா முகர்ஜியுடன் அறிமுகமாகினார். படம் மிக பெரிய வெற்றி பெற்றது. வினய் ராய் இதுவரை 12 படங்கள் வரை நடித்துள்ளார்.

தற்போழுது நடிகர் வினய் ராய் ஹீரோவாக இல்லாமல் வில்லனாக துப்பறிவாளன் ,டாக்டர்,எதற்கும் துணிந்தவன் படங்களில் நடித்துள்ளார்

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top