Connect with us

திருமணம் செய்து கொள்ளாத தமிழ் நடிகைகள் பட்டியல் இதோ…அட லிஸ்ட்டா பெருசா இருக்கே!..

Cinema News

திருமணம் செய்து கொள்ளாத தமிழ் நடிகைகள் பட்டியல் இதோ…அட லிஸ்ட்டா பெருசா இருக்கே!..

பொதுவாக நடிகைகளுக்கு சினிமாவில் இருக்கும் ஆயுள்காலம் குறைவு தான்.ஒரு கட்டத்திற்கு மேல் திருமணம் ஆனால் சினிமாவை விட்டு விலகிவிடுவார்கள். பட வாய்ப்புகள் குவிந்ததால் திருமண வாழ்கையை தள்ளி வைத்த நடிகைகள் ஏராளம். அதிலும் 35 வயதை கடந்தும் திருமணம் ஆகாத தமிழ் நடிகைகள் பட்டியல் இதோ!

த்ரிஷா: வயது 38

மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமான த்ரிஷா தமிழ், தெலுகு மலையாளம் என்று பல மொழிகளில் நடிகையாக வளம் வந்தவர்.

இதற்கு இடையே திரிஷா, தயாரிப்பாளர் வருண் மணியனுனடன் மோதிரம் மாத்தி கொண்டார். ஆனால் ஒரு சில தினங்களில் அதுவும் ரத்தானது. தற்பொழுது திரைப்படங்களில் நடித்து வருகிறார் த்ரிஷா.

நயன்தாரா: வயது 37

டயானா மரியம் குரியன் என்கிற நயன்தாரா கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். இவரது காதல் கதை தெரியாத ஆட்களே தமிழகத்தில் இருக்க மாட்டார்கள்.

நயன்தாரா தற்பொழுது விக்னேஷ் சிவனுடன் லிவிங் டுகெதரில் வாழ்கிறார். திருமணம் பற்றி இப்பொழுது வரை எந்த அறிவிப்பும் இல்லை.

நயன்தாரா, பிரியங்கா சோப்ரா போல் வாடகை தாய் மூலம் குழந்தை பெற முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது ,ஆனால் இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் குழந்தை விஷயத்தில் இன்னும் விக்னேஷ் சிவன் நயன்தாரா எந்த முடிவும் எடுக்கவில்லை என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்

ஏற்கனவே அவருக்கு முப்பத்தி ஏழு வயசு ஆயிடுச்சு. இனிமேல் குழந்தை பெற்றுக் கொள்வதில் சில சிரமங்களும் இருக்கிறது.

அனுஷ்கா: வயது 40

சூப்பர் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அனுஷ்கா தமிழிலும் கொடி கட்டி பறந்தார்.

பாகுபலி திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கும்போது அனுஷ்காவிற்கும் பிரபாஸிற்கும் காதல் என்று தகவல்கள் கசிந்தது. தற்பொழுது அதனை மறுத்துள்ளார் அனுஷ்கா. கடைசியாக அவர் நடிப்பில் வெளியான படம் 2020ல் வெளிவந்த நிசப்தம்.

ஸ்ருதிஹாசன்: வயது 36

தனது வாழ்க்கையை திறந்த புத்தகமாக வைத்திருப்பவர் ஸ்ருதிஹாசன்.நடிகர் கமலின் மகள் ஆவார்.


நடிகை ஸ்ருதிஹாசன் பல வருடங்களாக சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார்.திருமணம் குறித்து ஸ்ருதியும் சரி அவரது காதலரும் சரி யோசிக்கவே இல்லை

இலியானா :வயது 35

நண்பன் பட நாயகியாக நம் மனதை கவர்ந்தவர்.தெலுங்கு மற்றும் தமிழில் பிரபல நடிகையாக விளங்கியவர்.ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞரான ஆண்ட்ரூவ் நீபோனும் காதலித்து வந்தார். இருவரும் பொது இடங்களில் ஜோடியாக சுற்றி வந்தார்கள்.

இலியானா தனது காதலரை பிரிந்து விட்டதாக தற்போழுது தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top