மறைந்த வில்லன் நடிகர் சலிம் கெளஸ் பற்றி யாரும் அறியாத தகவல்கள் இதோ!..

by Vel Murugan |   ( Updated:2022-04-30 02:15:26  )
மறைந்த வில்லன் நடிகர் சலிம் கெளஸ் பற்றி யாரும் அறியாத தகவல்கள் இதோ!..
X

சலிம் கெளஸ் (Salim Ghouse) என்பவர் இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் தற்காப்புகலை நிபுணர் ஆவார்.தனது 70-ஆவது வயதில் 28 ஏப்ரல் 2022-ஆம் ஆண்டில் உடல்நலக் குறைவால் காலமானார்.

சலிம் கெளஸ் பற்றிய சுவாரசியமான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம் ..

சலிம் கெளஸ் அவர்களின் முதல் பிளஸ் பாயிண்ட் அவரின் குரல் தான்,அந்த கர கர இரட்டை குரல் தான் படங்களில் வில்லன் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது. இவரின் இயல்பான பேச்சும் அப்படித்தான் இருக்கும்

அவரின் முகம் இயல்பாக சாதாரணமாக இருக்கும் அதுவே மொட்டை அடித்துக்கொண்டால் அவரின் உருண்ட கண்கள் அச்சத்தை ஏற்படுத்தும் .

இவர் சென்னையில் பிறந்தவர் பிழைப்பிற்காக மும்பை சென்றுள்ளார்,இங்குதான் அவருக்கு முதல் முதலில் இந்தி படங்களுக்கு பின்னணி குரல் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.அதை தொடர்ந்து இந்தி படங்களில் வில்லனாக அறிமுகமானார்.

ஆரம்பத்தில் வெற்றிவிழா படத்தில் சிவாஜி கணேசன்,பிரபுவிடம் பேசி சலிம் கெளஸ் அவைகளை வில்லனாக கமலின் வெற்றிவிழா நடிக்க வைத்தார்.தமிழ் நாட்டை சேர்ந்த இவருக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது.

இந்தியில் வசனம் எழுதி தமிழில் பேசுவார்.சென்னையில் 6 வருடம் மட்டுமே இருந்ததால் தனக்கு தமிழ் தெரியாது என கூறியுள்ளார் .

பிறப்பிலும் சரி வாழ்க்கையிலும் சரி முழுநேர இஸ்லாமியராக இருப்பவர் சலிம் கெளஸ் ,தினமும் 5 முறை தொழுகுவது அவர் குணம். இந்து கோவிலுக்கு வருவதும் வழக்கமாக வைத்துள்ளார்,மதநல்லிணக்கம் கொண்டவர்.

மதம் வேறு,தொழில் வேறு,வாழ்க்கை வேறு,நடிப்பு வேறு என்பதை பிரிந்து புரிந்து வாழ்க்கை நடத்தினார்.பார்க்க மிரளும் தோற்றம் இருந்தாலும் பழக மிகவும் எளிமையானவர்.

வில்லன் நடிப்பில் பல தோற்றத்தில் நடிக்க இவர் முகம் சிறப்பாக பொருந்தும்,ஆனால் சண்டை காட்சிகளில் நடிக்க திறமை குறைவு.

இவரின் மிக சிறந்த குணங்களில் ஒன்று சம்பளம் கொடுப்பதை வாங்கிக் கொள்ளுவார்.அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டது இல்லை.மேலும் தன் குடும்பம் பற்றி அதிகம் பகிர்ந்து கொள்ளாதவர் அதை பகிர அவர் விரும்புவதும் இல்லை.

மேலும் சலிம் கெளஸ் அவர்கள் 40 படங்கள் மொத்தமாக நடித்துள்ளார்.தமிழில் மொத்தம் 12 படங்கள் நடித்துள்ளார்.

இவர் தமிழின் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார், அவர் நடித்த படங்களில் அதிகம் பேசப்பட்டத்தில் சில

ரெட்
வேட்டைக்காரன் (2009)
தாழ்வாரம்
தாஸ்
சின்னக் கவுண்டர்
வெற்றி விழா
திருடா திருடா

Next Story