
Biggboss Tamil 5
கடைசி நேரத்தில் ஷகிலா மகளை நிராகரித்த பிக்பாஸ் – காரணம் இது தான்!
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இணையத்தில் பல முறை வெளியான போட்டியாளர்கள் பெரும்பாலானோர் இடம் பெறவேயில்லை. அதில் முக்கியமானவர் ஷகிலாவின் மகள் மிலா. போட்டியாளர் லிஸ்டில் இடம் பெற்றிருந்த மிலா கடைசி நேரத்தில் நிராகரிக்கப்பட்டிருக்கிறார்.
காரணம் மிலா, திருநங்கை என்பதால் தானாம். ஏற்கனவே நமீதா மாரிமுத்து என்ற திருநங்கை மாடல் அழகி உள்ளே இருக்கிறார். இதனால் இரண்டு திருநங்கைகள் அனுப்ப கூடாது என்பது விஜய் டிவியின் விதிமுறைகளில் ஒன்று. அதிலும் மிலாவை விட நமீதா திறமை வாய்ந்தவர் என்பதால் பிக்பாஸ் குழு நமீதாவை தேர்ந்தெடுத்துள்ளது.

namitha
நமிதா மாரிமுத்து கடந்த 2014ஆம் ஆண்டு திருநங்கைகளுக்கான மிஸ் சென்னை போட்டியில் கலந்துக்கொண்டு டைட்டில் வென்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர் 2015 மிஸ் கூவாகம், 2018 மிஸ் இந்தியா போன்றவை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்