ரத்னகுமார் பேச்ச கேட்டு நாசமா போச்சு! ரஜினி171ல் லோகேஷ் 2.0வைப் பாக்க போறீங்க!..

by Rohini |   ( Updated:2023-11-20 06:31:16  )
loki
X

loki

Rajini 171: லியோ படம் வசூல் ரீதியாக சாதனை படைத்த படமாக இருந்தாலும் விமர்சன ரீதியாக மக்கள் வரவேற்பை பெறவில்லை. ஏகப்பட்ட விமர்சனத்திற்கு ஆளானார் லோகேஷ் கனகராஜ். ஆங்காங்கே சில லாஜிக்குகள் மிஸ் ஆனதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

லியோ படத்தில் ரைட்டராக இருந்த ரத்னகுமாரும் லியோ படத்தை பற்றி ரிலீஸுக்கு முன்பாகவே ஓவர் பில்டப்பும் செய்திருந்தார். அதுமட்டுமில்லாமல் லியோ வெற்றிவிழாவிலும் ரஜினியை மறைமுகமாக தாக்குவது மாதிரியான சில கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.

இதையும் படிங்க: இந்தியன் 2 படப்பிடிப்பில் இப்படி ஒரு அநியாயம் நடந்திருக்கு! பிக்பாஸில் அறிவுரை சொல்லும் கமல் இப்போ எங்க?

இதன் காரணமாகவே ரத்னகுமார் மீது ரசிகர்கள் வெறுப்பை காட்ட துவங்கினர். இந்த நிலையில் லோகேஷ் தனது ரஜினி 171 படத்திற்கான வேலைகளில் இறங்கியிருப்பதாக தெரிகிறது. இதற்காக சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெசண்ட் நகரில் லோகேஷிற்காக ஒரு தனி அலுவலகம் ஒன்றை அமைத்துக் கொடுத்திருக்கிறதாம்.

அந்த அலுவலகத்திற்கு மாத வாடகை மட்டும் சுமார் 2 லட்சம் வரை என்று தெரிகிறது. மேலும் ரஜினி 171 படத்திற்காக லோகேஷ் மிகவும் மெனக்கிட இருப்பதாக கூறியிருக்கிறாராம். லியோ படத்தில் செய்த தவறை ரஜினி 171 படத்தில் செய்யக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறாராம் லோகேஷ்.

இதையும் படிங்க: ஆளவந்தான் படத்தில் அப்பவே அட்வான்ஸ் டெக்னாலஜியா? அப்படின்னா ஏன் படம் ஓடல?

லியோ படம் வரை லோகேஷ் தன்னுடைய உதவியாளர்களை வைத்துக் கொண்டு மட்டும்தான் கதைகளை அமைத்து வந்தார். ஆனால் ரஜினி 171 க்காக கௌதம் மேனன், வெங்கட் பிரபு போன்றவர்கள் மாதிரியான முன் அனுபவம் பெற்ற சில இயக்குனர்களின் அறிவுரைகளோடு படத்திற்காக ஸ்கிரிப்டை அமைக்க இருக்கிறாராம்.

இதனால் படத்திற்கான கதையில் கூடுதல் வலு இருக்கும் என்று தெரிகிறது. அதே வகையில் ரஜினி படம் என்பதால் அதில் தன்னுடைய விளையாட்டுத்தனத்தை காட்ட கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறார் லோகேஷ்.

இதையும் படிங்க: அடேங்கப்பா என்ன ஒரு ஞாபகசக்தி!.. அண்ணாவையே அசர வைத்த சிவாஜி!..

Next Story