ஒரே ஒரு பேட்டி கொடுத்து படத்தின் பிசினஸை குளோஸ் செய்த மாஸ் நடிகர். புலம்பும் தயாரிப்பாளர்!
இத்தனை ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் முதல் முறையாக அந்த மாஸ் நடிகர் சமீபத்தில் அக்கட தேச மொழி படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இதனால் ரசிகர்கள் மிகுந்த குஷியில் இருந்தனர். மேலும் படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாக உள்ளதாக கூறப்பட்டதால், அந்த மாஸ் நடிகருக்கு இருக்கும் மார்க்கெட் காரணமாக நிச்சயம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் படம் செமையாக வியாபாரமாகும் என படத்தின் தயாரிப்பாளர் மனதில் கணக்கு போட்டு வைத்திருந்தாராம்.
ஆனால் அந்த மாஸ் நடிகரே தயாரிப்பாளரின் கனவில் மண்ணை அள்ளி போட்டு விட்டாராம். அதாவது அந்த மாஸ் நடிகரின் நடிப்பில் வெளியாகியுள்ள புதிய படத்தின் ப்ரோமோஷனுக்காக சமீபத்தில் அந்த மாஸ் நடிகர் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில் அக்கட தேச படம் குறித்து கேட்டதற்கு, வெளிப்படையாக பேசுவதாக நினைத்த மாஸ் நடிகர், வழக்கம் போல அதுவும் ஒரு டப்பிங் படமாகத்தான் அங்கே வெளியாகும். நம்ம ஏரியாவை விட்டு வெளியே போகிற ஐடியா இல்லைங்குற மாதிரி சொல்லி விட்டாராம்.
இதுதாங்க இப்போ பெரிய பிரச்சனை. அதாவது அக்கட தேச ரசிகர்களை ஒட்டுமொத்தமா கவர் பண்ணத்தான் தயாரிப்பு நிறுவனம் முழுக்க முழுக்க இந்த படத்தை பக்கத்து ஸ்டேட் படமாவே எடுக்கப் போறதா அறிவித்ததோட, ஹீரோயின் முதல் டெக்னீஷியன் வரை அத்தனை பேரையும் அந்த ரசிகர்களுக்கு பிடித்த ஆட்களாவே செலக்ட் பண்ணி அவங்கள இம்ப்ரெஸ் பண்ணி வச்சிருந்தாங்க.
ஆனால் நடிகரின் ஒரே ஒரு பேட்டி தற்போது ஒட்டுமொத்த படத்தின் வியாபாரத்தையும் பாதித்து விட்டதாம். ஆமாங்க நடிகரின் இந்த பேச்சால் இரு மொழி படம் என விளம்பரம் செய்து பெரிய அளவில் பிசினஸ் செய்ய நினைத்த தயாரிப்பாளரின் கனவு எல்லாம் கனவாகவே போய்விட்டதாம். இருப்பினும் எப்படியாவது இந்த படத்தை இரு மொழி படமாகவே மாற்றி விட வேண்டும் என்னும் முயற்சியில் படக்குழு உள்ளதாம்.
வெளியாகவுள்ள படத்துக்கு ப்ரோமோஷன் பண்றேன் சொல்லி என் படத்துக்கு ஆப்பு வச்சுட்டிங்களேன்னு மாஸ் நடிகரோட புது தயாரிப்பாளர் தற்போது முக்காடு போட்டு புலம்பி வருகிறாராம்.