Cinema News
வேற லெவலில் ஹிட் ஆன படங்கள்- நடிக்காமல், வாய்ப்பை மிஸ் செய்த முன்னணி ஹீரோக்கள் யார் தெரியுமா?
ஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த ஹீரோக்கள் தமிழ் சினிமாவில் சில படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுகின்றன. பல படங்கள் சுமாரான வெற்றியை பெறுகின்றன. சில படங்கள் மிக மோசமான தோல்வியை தழுவுகின்றன. குறிப்பாக சில மாதங்களுக்கு முன் வெளிவந்த லவ்டுடே, காந்தாரா ஆகிய படங்கள் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்களாக இருந்தும், மிகப்பெரிய பிளாக் பஸ்டர் மூவியாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஆனால், 67 கோடி ரூபாய் செலவில், பெரிய எதிர்பார்ப்புடன் எடுக்கப்பட்ட சமந்தா ந,டித்த சாகுந்தலம் படம் தோல்வியடைந்தது.
இயக்குநர் ஒரு படத்துக்கான கதையை உருவாக்கும்போது, அந்த படத்தின் ஹீரோவாக இந்த நடிகர் நடித்தால், சிறப்பாக இருக்கும் என்ற அடிப்படையில்தான், அந்த கதையை திட்டமிடுவார். ஆனால், இயக்குநர் குறிப்பிட்ட நடிகரிடம் அந்த கதையை சொல்லும்போது, அவர்களுக்கு அது பிடிக்காமல் போகலாம். அல்லது, அந்த நேரத்தில் பல படங்களில் அவர்கள் பிஸியாக இருந்தால், கால்ஷீட் தருவதில் பிரச்னை ஏற்படலாம். அல்லது, ஏதோ சில காரணங்களால் அவர்களால், அந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விடுவது, சகஜமாக தமிழ் சினிமாவில் நடிப்பதுதான்.
அப்படி சில வெற்றி படங்கள், மெகா ஹிட் ஆன அந்த படங்களில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகர்கள் என்பது ஆச்சரியத்தை தருகிறது. ஒருவேளை அந்த படங்களில், இயக்குநர் நினைத்த ஹீரோவே நடித்திருந்தால் அவரது லெவல் அப்போதே வேறு மாதிரியாக மாறி இருக்க அதிக வாய்ப்புள்ளது.அப்படி வேற லெவலில் ஹிட் ஆன சில தமிழ் படங்களை, மிஸ் செய்த நடிகர்கள், அந்த படங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.தனுஷ் – களவாணி, சூர்யா – சார்பட்டா, ரஜினி – இந்தியன், கமல் – எந்திரன், விஜய் – முதல்வன், சிம்பு – கோ, விஜய் சேதுபதி – கைதி, சியான் விக்ரம் – பாம்பே, அஜீத் – ஜீன்ஸ் … இப்படி அந்த பட்டியல் இருக்கிறது.
இந்த படங்களில் நடிக்க முதலில் அணுகியது இந்த ஹீரோக்களை தான். இவர்கள் நடிக்க மறுத்ததால்தான், மற்றவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்ட்டு, அந்த படங்கள் மூலம் அவர்கள் இன்னும் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றனர்.அந்த படங்களில் நடிக்க மறுத்த அவர்களுக்கு மாற்றாக விமல், ஆர்யா, அர்ஜூன், ஜீவா, கார்த்தி, அரவிந்த்சாமி, பிரசாந்த் போன்றவர்களுக்கு கிடைத்த வாய்ப்பால், அவர்கள் டாப் ஹீரோக்களாகினர். இதில் இந்தியன் படத்தில் ரஜினிக்கு பதிலாக கமலும், எந்திரன் படத்தில் கமலுக்கு பதிலாக ரஜினியும் நடித்திருப்பதும் கவனிக்கத்தக்கது.