கதாநாயகியின் குளியல் காட்சி!.. கண்டுக்காம விட்ட சென்சார் போர்டு!.. அப்பவே அந்த மாதிரி!...

இப்போது வரும் பல படங்களில் ஆபாச காட்சிகள் இருக்கிறது. அந்த காலத்தில் வரும் படங்கள் மிக நேர்த்தியாக ஒழுக்கமாக இருக்கும் என்று பலர் கூறுவதை நாம் கேட்டிருப்போம். ஆனால் அந்த காலத்திலும் அப்படி பட்ட காட்சிகள் இடம்பெற்ற படங்களும், பாடல்களும் உள்ளது தான். அப்படி திரையரங்கில் வெளியாகி, மக்கள் பார்த்து ஷாக் ஆகி, பிறகு சென்சார் போர்டு தலையிட்டு, சில ஆபாச காட்சிகளை நீக்கிய படம் கூட தமிழ் சினிமாவில் உள்ளது.
1980ம் ஆண்டு, கேரளாவில் அதிகம் கிடைக்கும் ஒரு பழத்தின் பெயரில் வெளியான படத்தில், வெற்றி என பொருள் வரும்படி பெயர் கொண்ட அந்த காலத்து ஆக்ஷன் ஹீரோ நடிகர் நடித்திருப்பார். இந்த படத்தை இயக்கியவர் இதற்கு முன்னரே பல படங்களில் ஆபாச காட்சிகளை வைத்து பெயர் பெற்றவர் தான். தமிழ் சினிமாவில் ஆபாசத்தை அறிமுகப்படுத்தியதே இவர் தான் என்று கூட கூறலாம். பெரும்பாலும் இவரின் எல்லா படத்திலும் ஹீரோயினுக்கு குளியல் காட்சி இருக்கும்.
அதுவும் பட்டபகலில் வெட்டவெளியில் ஹீரோயினை ஆற்றில் குளிக்க வைக்காமல் விட மாட்டார் அந்த இயக்குநர். மற்ற படங்களை விட இந்த படத்தில் உச்சக்கட்டமாக சென்றுவிட்டார். அது தான் சிக்கலை ஏற்படுத்திவிட்டது. அந்த பட ஹீரோயின் ஏற்கனவே அந்த இயக்குநரின் படங்களில் நடித்து அதன் மூலம் பிரபலமானார். இந்த படத்திலும் அந்த ஹீரோயின் கொஞ்சம் கூடுதலாகவே அந்த குளியல் காட்சியில் நடித்திருப்பார்.
கிட்டத்தட்ட அரை நிர்வாணம் என்று சொல்லும் அளவிற்கு அந்த காட்சியில் நடித்திருப்பார் அந்த ஹீரோயின். சினிமாவில் நல்ல பெயர் எடுத்த அந்த ஆக்ஷன் நடிகரும் இந்த படத்தில் கொஞ்சம் கூட யோசிக்காமல், இந்த படத்தில் அந்தரங்க காட்சிகளில் கொஞ்சம் ஓவராகவே நடித்துவிட்டார். இந்த படம் வெளியான பிறகு இந்த ஆபாச காட்சிகளுக்காகவே, படத்திற்கு கூட்டம் கூடியது.
ஆனால் படம் வெளியாகி சில நாட்களிலேயே, பலர் குற்றம் சாட்ட தொடங்கிவிட்டனர். சென்சார் போர்டு எப்படி இந்த படத்தை வெளியிட்டது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனால் இந்த பிரச்சனையில் சென்சார் போர்டு தலையிட்டு, படத்தில் இருந்த ஆபாச காட்சிகளை நீக்கிவிட்டது. அதன் பிறகு திரையரங்கில் கூட்டம் குறைந்துவிட்டது.
படம் ஓட வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் என்று நினைத்த இயக்குநர், அதற்கு பிறகு தான் திருந்தினார் என்று கூறுகின்றனர். இது பிரபல நடிகரும், இயக்குநரும் சேர்ந்து செய்த தப்பு, அவர்கள் இதனை செய்திருக்க கூடாது என்று அப்போதைய பத்திரிக்கைகள் இது குறித்து விமர்சித்திருந்தனர்.