நீங்க இப்படி செஞ்சுட்டீங்க....அவரு எப்படிம்மா வேலை செய்ய முடியும்? இது உங்களுக்கே நியாயமாம்மா..?

by sankaran v |
நீங்க இப்படி செஞ்சுட்டீங்க....அவரு எப்படிம்மா வேலை செய்ய முடியும்? இது உங்களுக்கே நியாயமாம்மா..?
X

MM

வயதானவரை திருமணம் செய்து கொள்வது என்பது நடைமுறையில் சிக்கலை உருவாக்கும். அரிதாக சில திருமணங்கள் அப்படி நடப்பதுண்டு. ஆனால் வாழ்க்கையில் பெரிதாக சுவாரசியம் இருக்காது.

மாறாக சந்தேகங்களும், பிரச்சனைகளும் பூதாகரமாக எழும்பும். இப்படி எதற்காக திருமணம் நடைபெறுகிறது என்று நாம் பார்த்தால் பெரும்பாலும் குடும்ப சூழ்நிலையாகத் தான் இருக்கும். மற்றொன்று பொருளாதாரம். இதுபோன்ற கதை அம்சம் கொண்ட தமிழ்ப்படங்களும் ஏராளமாக வந்துள்ளன. அவற்றில் ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.

தேவதாஸ்

Devadasu

1953ல் இப்படி ஒரு படம் வந்தது. நாயகன் தேவதாஸ_ம், நாயகி பார்வதியும் மிகத் தீவிரமாக காதலிக்கின்றனர். தேவதாஸின் அப்பா இதற்கு தடை போடுகிறார். பெண்ணை விற்றுப் பிழைக்கும் வம்சத்தில் வந்த வீட்டில் எப்படி நான் பெண் எடுப்பது எனக் கேட்டு பார்வதியின் அப்பாவை அவமானப்படுத்துகிறார்.

அந்த ஆத்திரத்தில் பங்கஜராஜ் என்ற வயதான ஜமீன்தாருக்கு தன் மகள் பார்வதியைத் திருமணம் செய்து வைத்து விடுகிறார். ஒருபுறம் இதற்கு மனம் இடம் கொடுக்காவிட்டாலும் தன் காதலனைப் படிப்படியாக மறந்து வயதானவரின் பிள்ளையைத் தன் பிள்ளையாக நினைத்து வளர்க்கிறாள்.

ஒரு கட்டத்தில் அவள் காதலன் தன் வீட்டின் முன்னே தெருவில் இறந்து கிடக்க அதைக் கேள்விப்பட்டும் போய் பார்க்காமல் இருந்து விடுகிறாள். கணவனே கண்கண்ட தெய்வம் என்றும் பிறன் நினைப்பு மனதில் இருக்கக்கூடாது என்றும் வைராக்கியமாக வாழும் அற்புத பாத்திரப்படைப்பு தான் பார்வதி.

1958ல் சிவாஜி நடிப்பில் வெளியான எதிர்பாராதது, 1953ல் அன்பு, 1947ல் பைத்தியக்காரன், 1955ல் கள்வனின் காதலி ஆகிய படங்களிலும் வயதானவரையே மணந்து கொள்கிறாள் நாயகி.

மூன்று முடிச்சு

இந்தப்படம் 1976ல் வெளியானது. தன் காதலனைக் கொன்று தன்னை அடையத் துடிக்கும் இளைஞனைப் பழிவாங்க அவனுடைய வயதான அப்பாவைத் திருமணம் செய்து கொண்டு தாய் ஸ்தானத்தில் நின்று இளைஞனைத் திருத்தும் நாயகி. படத்தை இயக்கியவர் புதுமை இயக்குனர் கே.பாலசந்தர்.

மூன்றாம் பிறை

Moondrampirai silk

பாலுமகேந்திராவின் இயக்கத்தில் 1982ல் வெளியான படம் மூன்றாம் பிறை. இந்தப்படத்தில் வயதான பூர்ணம் விஸ்வநாதனை சில்க் ஸ்மிதா திருமணம் செய்து கொண்டு விரகதாபத்தால் இரவில் நிம்மதியாகப் படுக்க முடியாமல் பரிதவிக்கிறாள்.

மோகமுள்

Moga mul

இராஜசேகரனின் இயக்கத்தில் வெளியான படம் மோக முள். இந்தப்படத்திலும் வயதானவரையே திருமணம் செய்கிறாள் நாயகி. அதன் பின்னர் விரகதாபம் வாட்டி வதைக்கிறது.

பெரும்பாலும் எந்த ஒரு இளம் பெண்ணும் தன் கணவன் இளைஞனாக கண்ணுக்கு குளிர்ச்சித் தரக்கூடிய வாலிபனாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவாள். ஆனால் அவள் விருப்பத்திற்கு மாறாக வயதான ஆண்கள் கணவனாக வாய்க்கும் போது அவள் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடுகிறது.

முதல் மரியாதை

Muthal mariyathai

சில படங்களில் விதிவிலக்காக வயதான ஆண்களையே விரும்புகிறாள் நாயகி. இது போன்ற கதையை பாலசந்தரின் அபூர்வ ராகங்கள், அவள் ஒரு தொடர்கதை படங்களில் காணலாம். அதே போல் பாரதிராஜாவின் முதல் மரியாதை படத்திலும் இந்த சம்பவம் நடக்கிறது. ஆனால் இவர்களுக்குள் திருமண பந்தம் நடைபெறாது.

Next Story