இதெல்லாம் ஒரு பெயரா.. இயக்குனர் மாற்றிய பெயரால் கடுப்பான முன்னணி நடிகை...
சினிமா நடிகைகள் பெருவாரியான நடிகைகளுக்கு உண்மையான பெயரை மாற்றிவிட்டு தான் தொடர்ந்து நடித்து வருவர். சிலர் அவர்களாகவோ, சிலர் இயக்குனராலோ பெயர் மாற்றம் நடைபெறும். அப்படி 80ஸ் காலத்தில் இயக்குனர் பாரதிராஜாவின் நாயகிகளுக்கு மட்டுமல்லாமல் அவரின் நாயகர்களுக்கு பெயர் மாற்றம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
இயக்குனர் இமயம் பாரதிராஜா குறிப்பிட்ட தான் அறிமுகப்படுத்தும் நாயகிகளுக்கு ரா என்ற எழுத்தில் தான் பெயர் வைப்பார். ராதிகா, ராதா, ரேவதி, ரஞ்சிதா ஆகியோர் இவரின் இயக்கத்தில் அறிமுகமான நடிகைகள். இதில் அலைகள் ஓய்வதில்லை படத்தில் ராதா நடிக்க வந்த போது அவரின் உண்மையான பெயர் உதய சந்திரிகாவாம்.
இவருக்கு ராதா என்ற பெயரை பாரதிராஜா தேர்ந்தெடுத்தப்போது இதெல்லாம் ஒரு பெயரா என கடுப்பாகி விட்டாராம் நடிகை. பின்னர், ராதாவின் நெருங்கி தோழிகள் சிலர் தான். இது உனக்கு ராசியாக பெயராக இருக்கும். தைரியமாக ஒப்புக்கொள் எனக் கூறியபிறகே இந்த பெயருக்கு ஓகே சொன்னதாக ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் ராதா.