ஒரு சின்ன சீன் கொடுத்துட்டு அட்ஜெஸ்மெண்ட் கேட்டான் அவன்!.. நடிகை பகீர் பேட்டி!.

by Akhilan |
ஒரு சின்ன சீன் கொடுத்துட்டு அட்ஜெஸ்மெண்ட் கேட்டான் அவன்!.. நடிகை பகீர் பேட்டி!.
X

Kollywood: சினிமாவில் நடிகைகளை அட்ஜஸ்ட்மென்ட்க்கு கூப்பிடும் பழக்கம் பல வருடமாக இருந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கு சில நடிகைகள் வளைந்து கொடுத்து சென்றாலும் பலர் பொதுவெளியில் அந்த விஷயத்தை போட்டு உடைத்து பிரச்சினை செய்து வருவதும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

அந்த வகையில் துணை நடிகை மாலதி தன்னுடைய சமீபத்திய படத்தில் தனக்கு ஏற்பட்ட அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினை குறித்து பேசி இருக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. அந்த பேட்டியில் இருந்து, நான் நடிப்பிற்காக தான் இங்கு வந்தேன். அதனால் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து கேட்டால் அவர்களிடம் நடிக்கவே மாட்டேன்.

இதையும் படிங்க: உலகநாயகன் கமலுக்காக மழை செய்த அந்த விஷயம்… வாயடைத்து போன படக்குழு…

சமீபத்தில் ஒரு படம் நடித்து முடித்து இருக்கிறேன். அதில் என்னுடைய கேரக்டருக்கு ஐந்து நிமிடம் மட்டுமே காட்சிகள் வரும். அப்படத்தின் சூட்டிங் எல்லாம் முடிந்த பிறகு இயக்குனர் என்னை அழைத்தார். தயாரிப்பாளர் ரூம் போட்டு விட்டார். வீணாகப் போய்விடும் எனக் கூறி என்னை அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ள சொன்னார்.

எனக்கு அது அதிர்ச்சியாக இருந்தாலும் அவரை திட்டி விட்டேன் நான். நான் படத்தின் மொத்த ஹீரோயினாக இருந்தால் அல்லது முக்கிய கேரக்டரால் இருந்தால் கூட பரவாயில்லை. வெறும் ஐந்து நிமிடம் வரும் ரோல்களுக்கு என்னை போய் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ள கூறினார்கள்.

ஒருநாள் ஷூட்டிங்கிற்கு மூன்று நாள் ரூமில் வேஸ்ட்டாக தங்க வைத்தார்கள். அப்பொழுது அங்கு மேனேஜராக இருந்த ஒருவர் நான் தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு அடிக்கடி என்னை பார்க்க வருவார். மேலே விழுவது, முத்தம் கொடுப்பது என ஓவராக நடந்து கொள்வார். இருந்தும் நாம் தனியாக வந்திருக்கிறோம் இதெல்லாம் சாதாரணம் என நினைத்து அவரை பொறுத்துக் கொண்டேன்.

இதையும் படிங்க: ரஜினியுடன் நடிச்சப்ப ஒன்னும் நடக்கலை… விஜயுடன் வேற மாதிரி ஆச்சு… ஓபனாக உடைத்த பிரபல நடிகை!..

படத்தின் இயக்குனர் என்னுடைய நண்பர் என்பதால் அவரிடம் சொல்லி அந்த மேனேஜரை தடுத்து வைத்தேன். பின்னர் தான் தெரிந்தது அந்த மேனேஜரிடம் என்னை தயவு செய்து கூறியது இயக்குனர் தான் என்பது. அப்படத்தின் சூட்டிங் முடிந்த நான் வரும்போது அந்த மேனேஜரை திட்டிவிட்டு தான் வைத்தேன். ஒரு சின்ன ரோலுக்கே எனக்கு இத்தனை பெரிய தொல்லை கொடுக்கும்போது, பெரிய ஹீரோயின்களுக்கு எவ்வளவு பெரிய பிரச்சனை இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

Next Story