கோலிவுட்டில் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நயன்தாரா, கவினுடன் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ஹாய். இந்த படத்தை லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விஷ்ணு எடவன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது..
இந்த படத்தில் ராதிகா சரத்குமார், பாக்யராஜ், பிரபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கவினுகு கடந்த மூன்று படங்களுமே ஹிட் படங்களாக அமையவில்லை.. ஸ்டார், பிளடி பெக்கர், கிஸ் ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. இந்த நிலையில்தான் ஒரு குடும்ப பொழுதுபோக்கு காமெடி கலந்த காதல் திரைப்படமாக ஹாய் படம் வெளிவந்தது. இந்த படம் வெளியானவுடன் பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தன..
எனவே இந்த படம் கவினுக்கு ஒரு சூப்பர் ஹிட் படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் படம் வெளியாகி 8 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இந்த படம் ரூ.10 கோடி கூட வசூல் செய்யவில்லை என சொல்லப்படுகிறது. நேற்றுவரை இப்படம் 9 கோடியை மட்டுமே வசூல் செய்திருந்தது.
நயன்தாராவின் சம்பளமே ரூ.10 முதல் 15 கோடி என சொல்லப்படும் நிலையில் அவரின் சம்பளத்தை கூட இந்த படம் வசூலிக்கவில்லை என சொல்கிறார்கள். இந்த படத்தை நயன்தாராவே தயாரித்திருக்கிறார். எனவே இந்த படம் அவருக்கு லாபமா? நஷ்டமா? என்பது விரைவில் தெரிந்துவிடும்..







