பலகோடி பட்ஜெட்டில் உருவாகி அட்டர் ஃப்ளாப் ஆன 5 திரைப்படங்கள்… அட பாவத்த!..
இந்திய சினிமாவில் தற்போது மிகவும் சாதாரணமாகவே 100 கோடி, 150 கோடிகளுக்கான பட்ஜெட்டில் பல திரைப்படங்கள் வெளியாகின்றன. ஆனால் அது எல்லாம் ஹிட் ஆகிறதா என்றால் இல்லை.
மிகப் பெரிய பட்ஜெட் என்று விளம்பரப்படுத்தி மக்களிடம் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் படக்குழுவினர் அந்த எதிர்பார்ப்பை துளி அளவுக்கூட பூர்த்தி செய்வதில்லை. அதுவும் அத்திரைப்படங்களில் பல முக்கிய நடிகர்கள் இருக்கிறார்களே, படம் நன்றாக இருக்கும் என்று நம்பி மக்களும் அத்திரைப்படங்களை திரையரங்கில் சென்று பார்க்கிறார்கள். ஆனால் கடைசியில் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
அந்த படத்தை எடுத்த தயாரிப்பாளருக்கும் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. இவ்வாறு சமீபத்தில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மொக்கை வாங்கிய 5 திரைப்படங்களில் பட்டியலை இப்போது பார்க்கலாம்.
1.கோப்ரா
சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்து மாதம் வெளியான திரைப்படம் “கோப்ரா”. இத்திரைப்படத்திற்கு அதிகளவில் எதிர்பார்ப்பு இருந்தது. மேலும் இத்திரைப்படத்தின் வெளியீடு பல மாதங்கள் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. ஆதலால் இத்திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்து வந்தது.
ஆனால் இத்திரைப்படம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. அதுவும் 3 மணி நேரம் நீளத்தைக்கொண்ட இத்திரைப்படம் மக்களின் பொறுமையை சோதித்தது. அதன் பின் 2 மணி 40 நிமிடங்களாக இத்திரைப்படத்தின் அளவு குறைக்கப்பட்டது. ஆனால் அப்படியும் இத்திரைப்படம் பிக்கப் ஆகவில்லை. கிட்டத்தட்ட 100 கோடி பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் வெறும் 40 கோடிகளையே வசூல் செய்தது.
2.ராதே ஷ்யாம்
பாகுபலி புகழ் பிரபாஸின் நடிப்பில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பேன் இந்தியா அளவில் வெளியான திரைப்படம் “ராதே ஷ்யாம்”. இத்திரைப்படத்தின் டிரைலர் மிகவும் வித்தியாசமாக இருந்ததால் இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மிக ஆவலோடு காத்திருந்தனர். ஆனால் இத்திரைப்படத்திற்கு போனவர்களின் கதி அதோகதியானது.
இணையத்தில் “ராதே ஜோசியம்” என்று கிண்டல் செய்யத்தொடங்கிவிட்டனர். மிகவும் பலவீனமாக அமைக்கப்பட்ட திரைக்கதையே இத்திரைப்படத்தின் தோல்விக்கு காரணம் என கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 350 கோடி செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 200 கோடிகளையே வசூல் செய்தது.
3.சம்ஷேரா
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ரன்பீர் கபூரின் “சம்ஷேரா” திரைப்படம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியானது. மிகவும் பிரம்மாண்டமாக இத்திரைப்படம் எடுக்கப்பட்டதாக இத்திரைப்படம் விளம்பரப்படுத்தப்பட்டு பேன் இந்திய அளவில் வெளியானது.
படம் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டாலும் கதையம்சம் மக்களை ஈர்க்கவில்லை. ஆதலால் இத்திரைப்படம் செல்ஃப் எடுக்காமல் கவிழ்ந்து படுத்துவிட்டது. கிட்டத்தட்ட 150 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் வெறும் 63 கோடிகளையே வசூல் செய்தது.
- சாம்ராட் பிரித்விராஜ்
பயோபிக்கிற்கே பெயர் போன அக்சய் குமார் நடிப்பில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பேன் இந்திய அளவில் வெளியான திரைப்படம் “சாம்ராட் பிரித்விராஜ்”. வரலாற்றுத் திரைப்படம் என்பதால் மிகவும் பிரம்மாண்டமாக இத்திரைப்படத்தை படக்குழுவினர் உருவாக்கினார்கள்.
மேலும் இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெறும் எனவும் எதிர்பார்த்தார்கள். ஆனால் ரசிகர்கள் இத்திரைப்படத்தை கண்டுக்கொள்ளவே இல்லை என்று கூட கூறலாம். அந்த அளவுக்கு படுதோல்வியடைந்தது இத்திரைப்படம். கிட்டத்தட்ட 300 கோடி செலவில் எடுக்கப்பட்ட “சாம்ராட் பிரித்விராஜ்” 90 கோடிகளையே வசூல் செய்தது.
5.லால் சிங் சத்தா
ஹாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற “ஃபாரஸ்ட் கம்ப்” திரைப்படத்தின் ரீமேக்தான் “லால் சிங் சத்தா”. இதில் அமீர் கான் ஹீரோவாக நடித்திருந்தார். இத்திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்து மாதம் பேன் இந்திய அளவில் வெளிவந்தது.
“ஃபாரஸ்ட் கம்ப்” திரைப்படத்திற்கு இந்தியாவில் பல ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதால் “லால் சிங் சத்தா” திரைப்படத்திற்கு ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். ஆனால் பாலிவுட் சினிமாவுக்கே பிடித்த கெட்ட நேரம் இத்திரைப்படத்தையும் விட்டு வைக்கவில்லை. கிட்டத்தட்ட 180 கோடி பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் 130 கோடியையே வசூல் செய்தது.
இதையும் படிங்க: கண்ணதாசனை போகிறபோக்கில் வம்புக்கு இழுத்த ஜெயகாந்தன்… கவியரசர் தந்த தரமான பதிலடி…