ஜனநாயகன் தணிக்கை தொடர்பான வழக்கில் தணிக்கை வாரியத்துக்கு ஆதரவாக சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
ஜனநாயகன் திரைப்படம் கடந்த 9ம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் சென்சார் பிரச்சனையில் சிக்கியதால் படம் வெளியாகவில்லை. மீண்டும் மறுதணிக்கை செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் சொன்னதால் படத்தின் தயாரிப்பாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்கில் ‘படத்திற்கு உடனே சென்சார் சான்றிதழ் கொடுக்க வேண்டும்’ என தனி நீதிபதி பிடி ஆஷா உத்தரவிட்டார். ஆனால், உடனே தணிக்கை வாரியம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.. அதையடுத்து தனி நீதிபதிஉத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது.
அதன்பின் தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தை அணுகியது.. ஆனால் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திலே நடத்தலாம் என உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்தது. அப்போது தீர்ப்பு தேதியை சொல்லாமல் வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி. இந்நிலையில் இந்த வழக்கில் தற்போது நீதிபதி தீர்ப்பை வெளியிட்டார்..
அதன்படி படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க வேண்டும் என்கிற தனி நீதிபதியின் உத்தரவுக்கு நீதிபதி அமர்வு தடை விதித்தது.
தணிக்கை வாரிய அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் படம் மறுஆய்வு அனுப்பப்பட்டது.. மத அடையாளங்களை அவதூறு செய்வது ஏற்க முடியாது.. படத்தில் பாதுகாப்பு படை சின்னம் பயன்படுத்தப்பட்டதால் நிபுணர் குழுவுக்கு அனுப்பப்பட்டது.. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மீண்டும் விசாரணை செய்து தீர்ப்பு வழங்க தலைமை நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். இதையடுத்து ஜனநாயகன் படத்தை உடனே ரிலீஸ் செய்யமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.





