More
Categories: Cinema News latest news

விஜயகாந்த்தின் அந்த படத்தின் ஆடியோவுக்கே தெருவை விலைக்கு வாங்கிரலாம்! அந்தளவு லாபம் சேர்த்த படம்

Vijayakanth: தமிழ் சினிமாவில் அனைவரும் விரும்பப்படும் நடிகராக இன்றுவரை குடிகொண்டிருப்பவர் நடிகர் விஜயகாந்த். எட்டு எடுத்து வைத்தால் சிங்கம், சீறிப்பாய்ந்தால் புலி என்ற அடைமொழிக்கு சொந்தக்காரராகவும் திகழ்ந்தவர். ரசிகர்களை எப்பவும் உற்சாகத்தில் வைத்தவர்.

எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக ரசிகர்களின் நலனில் பெரும் அக்கறை கொண்டவராகவும் இருந்தார். மற்றவர்களுக்கு போகத்தான் தனக்கு எனும் பெரும் கொடையாளியாகவும் வாழ்ந்து வந்தார் விஜயகாந்த்.

இதையும் படிங்க: பார்த்திபன் எடுத்த கதையை 20 வருடத்துக்கு முன்பே சொன்ன கமல்!. அதனாலதான் அவர் உலக நாயகன்!..

இப்படி பட்ட ஒரு மனிதர் இன்று எழுந்து நடக்க முடியாமல் மக்களை சந்திக்க முடியாமல் இருப்பதை பார்க்கும் போது மனது வலிக்கத்தான் செய்கிறது. விஜயகாந்த் நடித்த பெரும்பாலான படங்கள் அரசியல் பேசும் படங்களாகவும் குற்றத்தை தட்டிக் கேட்கும் படங்களாகவே அமைந்திருக்கும்.

அதனாலேயே மக்கள் இவரை ரியல் ஹீரோவாகவே பார்க்க ஆரம்பித்தார்கள். அந்த வகையில் ஒரு படத்தில் முழு கிராமத்தானாக நடித்திருப்பார் விஜயகாந்த். அம்மன் கோயில் கிழக்காலே என்ற படம் தான் அது.

இதையும் படிங்க: சின்னத்திரையின் இளையதளபதியா இவரு? ஐய்யயோ விஜய் அண்ணா! தாங்க முடியாமல் கதறும் ரசிகர்கள்

படமும் சூப்பர் ஹிட்.பாடலும் சூப்பர் ஹிட். இந்தப் படத்தை பற்றிய சில சுவாரஸ்ய சம்பவங்களை சினிமா வினியோகஸ்தரரும் தயாரிப்பாளருமான ரவீந்திரன் ஒரு பேட்டியில் கூறினார். அம்மன் கோயில் கிழக்காலே திரைப்படத்தை வினியோகம் பண்ணும் போது எப்படிப்பட்ட லாபத்தை அந்தப் படம் பெற்றது என்பதை விளக்கமாக கூறியிருக்கிறார்.

ரவீந்திரனின் நெருங்கிய உறவினர் ஒருவர்தான் அம்மன் கோயில் கிழக்காலே படத்தை 18 லட்சத்துக்கு வாங்கினாராம். அதை வாங்கி 20 லட்சத்துக்கு விற்றாராம். இதன் மூலம் இவர்களுக்கு 2 லட்சம் லாபம் கிடைத்திருக்கிறது.

இதையும் படிங்க: விஜய்க்கு லோகேஷ்னா அஜித்துக்கு இவர்தான்! அடுத்த பட இயக்குனரை தட்டி தூக்கிய அஜித் – சம்பளத்துல தல எகிறிட்டாரே

அந்த 2 லட்சத்துக்கு ரவீந்திரனின் உறவினர் ஒரு வீட்டை வாங்கினாராம். அந்த சமயத்தில் இந்த இரண்டு லட்சத்துக்கு அப்போதைய மதிப்பீட்டின் படி ஒரு தெருவையே வாங்கியிருக்கலாம். ஏனெனில் அந்தளவுக்கு அந்தப் படத்தின் பாடல்கள் செம ஹிட்டானதாம்.

இந்தப் படத்தை நாமலே வினியோகம் பண்ணலாம் என சொல்லியும் கேட்காத ரவீந்திரன் உறவினர் வேறு ஒருவருக்கு விற்றிருக்கிறார். ஆனால் அந்த நபரோ இதை ஒரு கோடிக்கு என்.எஸ்.சிக்கு விற்றாராம். இதன் மூலம் 20 லட்சத்துக்கு வாங்கிய விஜயகாந்த்  படம் 1 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. இதை ஒரு பேட்டியின் மூலம் கூறி தனது ஆதங்கத்தை கொட்டினார் ரவீந்திரன்.

Published by
Rohini