ட்ரோல்களை சுக்கு நூறாக உடைத்த சூர்யா!.. சத்தமே இல்லாம வசூல் வேட்டையாடி கோட்டையை பிடித்த சம்பவம்..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் ஒரு உயர்வான அந்தஸ்து உள்ள நடிகராக இருந்து வருகிறார். தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.
படப்பிடிப்பு விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்படும் படமாக சூர்யா 42 அமையும் என்று சொல்லப்படுகிறது. வரலாற்றுப் பின்னனியில் உருவாகும் இந்தப் படத்தில் சூர்யா வித விதமான கெட்டப்களில் வந்து நடிக்கிறாராம்.
மேலும் 10 மொழிகளில் இந்தப் படம் தயாராகுகிறது என்றும் சொல்லப்படுகிறது. சூர்யாவின் கெரியரிலேயே இந்தப் படம் தான் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சூர்யாவிற்கு பல நல்ல படங்கள் வந்தாலும் நெட்டிசன்கள் சிலர் இன்னும் விஜய் அஜித் இடங்களை பிடிக்க முடியாமல் தானே திணறி வருகிறார் என்று கிண்டலடித்தும் கொண்டும் இருந்தனர்.
ஆனால் அதையெல்லாம் தற்போது சூர்யா தகர்ந்தெறிந்திருக்கிறார். அதாவது விஜய் படம் என்றாலே படம் வெளியாவதற்கு முன் பிஸினஸில் பல கோடிகளை அள்ளி வசூலில் வேட்டையாடும் சக்கரவர்த்தியாக இருந்து வந்தார். அதை தற்போது சூர்யா 42 படம் உடைத்து விட்டது. இந்தப் படம் கிட்டத்தட்ட 500 கோடி வரை பிஸினஸ் ஆகியிருக்கின்றதாம்.
இதையும் படிங்க : உண்மையான கலைஞனா இருந்தா இத செஞ்சிருக்கனும்.. இளையராஜா, ரஹ்மானை வெளுத்து வாங்கிய ஸ்ரீபிரியா..
இதனை தொடர்ந்தும் சூர்யா தான் அடுத்து நடிக்க இருக்கும் வெற்றிமாறன் கூட்டணியான ‘வாடிவாசல்’ படமும் பிஸினஸில் இறங்கியிருக்கிறதாம். இதன் மூலம் சூர்யா தன்னுடைய இடத்தை பிடிக்க நெருங்கி விட்டார் என்றே தெரிகிறது. மேலும் இந்தப் படம் ரிலீஸ் பற்றி பிரபல தயாரிப்பாளரான தனஞ்செயன் கூறும்போது படப்பிடிப்பு இன்னும் வெகு காலம் நடக்கும் என்பதால் படத்தின் இயக்குனர் சிவா படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் தேதியை அறிவிக்கலாம் என்று கூறிவிட்டாராம்.