பிரதீப் ரங்கநாதனிடமே மொக்கை வாங்கிய அஜித்… இதுக்கு இப்போ ஒரே வழிதான் இருக்கு!..

by Akhilan |   ( Updated:2025-04-09 06:50:00  )
பிரதீப் ரங்கநாதனிடமே மொக்கை வாங்கிய அஜித்… இதுக்கு இப்போ ஒரே வழிதான் இருக்கு!..
X

Ajithkumar: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் குமார் தற்போது வளர்ந்து வரும் நடிகரான பிரதீப் ரங்கநாதனிடம் தோற்றுப் போன சம்பவம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

தற்போதயெல்லாம் தமிழ் சினிமா உலகில் ரசிகர்களே ஒவ்வொரு படத்தின் வசூல் விபரங்களை தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் படத்தின் கதை மற்றும் திரைக்கதையை விட அதன் வசூல் குறித்த பேச்சு தான் பல இடங்களில் இருக்கிறது.

ஒரு படத்தின் மிகப்பெரிய வசூல் தான் அப்படத்தின் வெற்றியை தீர்மானிக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வெளிவந்த திரைப்படங்களில் அதிக வசூல் குவித்த டாப் 10 இந்திய திரைப்படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதில் தமிழ் சினிமாவிலிருந்து இரண்டே இரண்டு படங்கள் மட்டுமே இதுவரை இடம்பெற்று இருக்கிறது. அந்த வகையில் அதிக வசூல் குவித்து முதல் இடத்தினை பிடித்த திரைப்படம் சாவா. சத்ரபதி சிவாஜி கதையை மையமாக வைத்து பாலிவுட்டில் உருவான இப்படத்தில் விக்கி கெளவ்சல் நடித்திருந்தார்.

இப்படம் இதுவரை உலகம் முழுவதிலும் 800 கோடி அளவில் வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் இடம் பிடித்திருப்பது வெங்கடேஷ் நடிப்பில் உருவான சங்கிராந்தி வஸ்தனம். இது வசூலில் 260 கோடி வரை குவித்து இருந்தது. மீனாட்சி சவுத்ரி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தனர்.

மூன்றாம் இடத்தில் மலையாள ரிலீசான எம்புரான். பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் இப்படம் இதுவரை 254 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வருகிறது. நான்காம் இடம் ஷங்கர் இயக்கத்தில் உருவான கேம் சேஞ்சர். இப்படம் பெரிய அளவில் விமர்சன வெற்றி இல்லை என்றாலும் வசூலில் 186 கோடி வரை குவித்துள்ளது.

பாலிவுட்டில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான திரைப்படம் சிக்கந்தர். இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் நெகடிவ் விமர்சனம் குவிந்ததால் வசூலிலும் பெரிய அடி வாங்கி தற்போது வரை 175 கோடி வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டில் ஸ்ரீகுமார் நடிப்பில் வெளியான ஸ்கை போஸ்ட் திரைப்படம் வசூலில் ஆறாம் இடம் பிடித்து 170 கோடி வசூல் செய்திருக்கிறது. ஆச்சரியமான எண்ட்ரியாக அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படம் 152 கோடி வசூல் செய்து ஏழாம் இடத்தில் உள்ளது.

அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம் எட்டாம் இடத்தில் 140 கோடி வரை மட்டுமே வசூல் செய்தது. பாலகிருஷ்ணா நடிப்பில் தாக்கு மகாராஜ் 122 கோடி வசூல் செய்திருந்தது. நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவியின் தண்டேல் 90 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் நாளை அஜித்குமார் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இப்படத்திற்கு தற்போதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கும் நிலையில் இப்படத்தின் வசூல் அதிகமாகி டாப் ஐந்து இடத்திற்குள் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story