Connect with us
sivaji ganesan

Cinema History

சிவாஜி படத்த பார்க்க மாட்டேன்… என் மேல நம்பிக்கை இருந்தா குடுங்க… ஓபனா சொன்ன நடிகர்…

சிவாஜி கணேசன் தமிழ் திரையுலகின் பழங்கால நடிகர்களில் ஒருவர். இவர் பராசக்தி எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். இவரை நடிப்பின் அரக்கன் என்று கூட கூறலாம். தனது நடிப்பினால் அனைவரையும் வியந்து பார்க்க வைத்த மனிதர்.

ஒரு மனிதர் இவ்வாறெல்லாம் நடிக்க முடியுமா என அனைவரையும் பேச வைத்தவர். இதனாலேயே இவரை நடிகர் திலகம் என அனைவரும் அழைத்தனர். இவர் பாகபிரிவினை, கர்ணன், திருவிலையாடல் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர்.

இதையும் படிங்க:சினிமாவிற்கு முழுக்கு போட்ட பத்மினி…. தனது பாடல் மூலம் பழி வாங்கிய கண்ணதாசன்…

வீரபாண்டிய கட்டபொம்மனாய் தனது நடிப்பின் மூலம் அனைவர் மனதிலும் எழுச்சியை உண்டு பண்ணியவர். இவரின் நடிப்பிற்கு தமிழ் திரையுலகம் மட்டுமின்றி பாலிவுட் உலகமும் கூட அடிமை. 1958ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான படம்தான் உத்தமபுத்திரன். இப்படத்தில் இவர் இரு வேடங்களின் நடித்திருந்தார்.

இப்படத்தினை ஹிந்தியில் எடுக்க இதன் தயாரிப்பாளர்கள் நினைத்துள்ளனர். அதற்காக ஹிந்தி பழங்கால நடிகரான அசோக் குமாரிடம் படக்குழு சென்றுள்ளனர். அப்போது அவரிடம் சிவாஜி நடித்த உத்தமபுத்திரன் படத்தை பார்க்க கூறியுள்ளனர். படத்தை பார்த்த அவர் ஆச்சரியத்தில் உறைந்து போயிருந்துள்ளார்.

இதையும் படிங்க:அவளுடன் நானும் இறந்துவிட்டேன்.. மகளை நினைத்து உருகும் விஜய் ஆண்டனி!…

சிவாஜியின் நடிப்பு நன்றாக இருக்கும் என கேள்விபட்டிருக்கின்றேன். ஆனால் இப்போதுதான் பார்க்கிறேன். என்ன ஒரு மனிதர்…என்ன ஒரு நடிப்பு இவர் நடித்த இப்படத்தில் நான் நடித்தால் நன்றாக இருக்காது என கூறிவிட்டாராம்.  அதைபோல 1961ஆம் ஆண்டு இயக்குனர் பீம் சிங் இயக்கத்தில் வெளியான படம்தான் பாசமலர். இப்படத்தில் சிவாஜி ,சாவித்ரி போன்ற பிர்பலங்கள் நடித்திருந்தனர்.

இப்படம் மிக பெரிய வெற்றியையும் கண்டது. இப்படத்தை தயாரித்த ராஜாமணி இப்படத்தை ஹிந்தியில் தயாரிக்க மீண்டும் அசோக் குமாரிடம் பேசியுள்ளனர். ஆனால் அசோக் குமார் நாம் அப்படத்தை பார்க்க மாட்டேன். உங்களுக்கு என் மேல் நம்பிக்கை இருந்தால் நான் நன்றாய் நடிப்பேன் என நம்பிக்கை இருந்தால் எனக்கு அப்படத்தை தாருங்கள் என கூறிவிட்டாராம். பின் பாசமலர் படத்தைல் ஹிந்தியில் நடித்து கொடுத்துள்ளார். அப்படம் ஹிந்தியிலும் மிகப்பெரிய வெற்றியை கண்டது.

இதையும் படிங்க:நடிக்க சொன்னா ஓவர் ஆக்டிங் பண்றீங்க..! பத்திரிக்கையாளர் கேள்விக்கு தக்க பதிலடி கொடுத்த சிவாஜி..!

google news
Continue Reading

More in Cinema History

To Top