குறைந்த பட்ஜெட்டில் உருவாகி பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது இந்தி திரைப்படமான ‘ஹனுமான் அன்ஷ்’. விஷால் சதுர்வேதி எழுதி இயக்கியுள்ள இப்படம், சுமார் ரூ.2 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட நிலையில், தற்போது உலகளவில் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பலரையும் ஆச்சர்யபடுத்தியுள்ளது.
இப்படத்தில் ஷோபினாவ், சந்தன் கே. ஆனந்த், பூர்ணிமா திவாரி, அனில் ரஸ்தோகி, குல்ஷன் பாண்டே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது உலகளவில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், படத்தின் தயாரிப்பு செலவை விட பல மடங்கு அதிகமாக வசூலித்துள்ள ‘ஹனுமான் அன்ஷ்’, குறைந்த பட்ஜெட்டிலும் நல்ல கதையாக இருந்தால் ரசிகர்களை சென்றடைய முடியும் என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது.







