More
Categories: Cinema History Cinema News latest news

இந்திப் படத்தில் இருந்து இத்தனை படங்கள் ரீமேக்கா? அட, இவ்ளோ நாள் தெரியாமப் போச்சே..!

இந்தித்திரை உலகில் புகழ்பெற்ற பல படங்கள் தமிழில் ரீமேக் ஆகி உள்ளன.
அடேங்கப்பா இவ்ளோ படங்கள் அங்கே இருந்து தான் வந்துருக்கான்னு மலைச்சிடாதீங்க. இது சும்மா ஒரு டிரெய்லர் தான். இன்னும் நிறைய இருக்கு. வாங்க அந்த டிரெய்லரைப் பார்க்கலாம்.

‘துரோகால்’ என்ற படம் தான் கமல், அர்ஜூன் நடித்த குருதிப்புனல். ‘மா’ என்ற படம் ‘அன்னை ஓர் ஆலயம்’ ஆனது. ‘மெய்ன் ஹூன் நா’ என்ற இந்திப் படம் தான் அஜீத் 2008ல் நடித்த ‘ஏகன்’. ‘அலிபாபா ஆர் 40 சோர்’ என்ற இந்திப் படம் தான் எம்ஜிஆர் 1954ல் நடித்த ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படம்.

Advertising
Advertising

இதையும் படிங்க… காமெடி நடிகருக்காக அப்பாவை தட்டி கேட்ட விஜய்!.. நட்புக்கு ஒன்னுன்னா விடமாட்டாராம்!…

‘அந்தாதூண்’ என்ற இந்திப்படத்தை ரீமேக் செய்து நடிகர் பிரசாந்த் ‘அந்தகன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ‘ராஜா ஜானி’ என்ற இந்திப் படத்தை ரீமேக் செய்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ‘அடுத்த வாரிசு’ என்ற படத்தில் நடித்தார்.

‘சைனா டவுன்’ என்ற இந்திப்படத்தை ரீமேக் செய்து ‘குடியிருந்த கோயில்’ என்ற படத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்துள்ளார். ‘நில் பட்டே சன்னாத்தா’ என்ற இந்திப்படத்தை ரீமேக் செய்து ‘அம்மா கணக்கு’ என்ற படத்தில் அமலாபால் நடித்தார்.

‘பேண்ட் பாஜா பாரத்’ என்ற இந்திப்படம் தான் தமிழில் ‘ஆஹா கல்யாணம்’ என்ற பெயரில் 2014ல் வெளியானது. ‘சதக்’ என்ற இந்திப்படம் தமிழில் பிரசாந்த் நடிப்பில் ‘அப்பு’வாக வெளியானது.

‘குட்கார்ஷ்’ என்ற இந்திப்படம் தமிழில் 1992ல் ‘அண்ணாமலை’ என்ற பெயரில் ரஜினி நடிப்பில் வெளியானது. ‘யாதோங்கி பாரத்’ என்ற இந்திப்படம் எம்ஜிஆரின் ‘நாளை நமதே’ ஆனது. ‘முகடர் கா சிக்கன்தர்’ என்ற பெயரில் வெளியான இந்திப்படம் சிவாஜி நடிப்பில் ‘அமரகாவியம்’ ஆனது. ‘காயல்’ என்ற இந்திப்படத்தை ரீமேக் செய்து தமிழில் ‘பரதன்’ என்று விஜயகாந்த் நடிப்பில் படம் வெளியானது. ‘இன்சாப்’ என்ற இந்திப்படம், தமிழில் சத்யராஜ் நடித்த ‘சின்னப்பதாஸ்’ படமானது.

Parathan

‘டான்’ என்ற இந்திப்படம் தமிழில் ரஜினி நடித்த ‘பில்லா’வானது. ‘ஜாப் விமேட்’ என்ற இந்திப்படம் தமிழில் ‘கண்டேன் காதலை’ படமானது. ‘ஷிட்டி’ என்ற இந்திப்படம் தமிழில் தர்மாவானது. ‘காலியா’ என்ற இந்திப்படம் தமிழில் ‘கூலிக்காரன்’ ஆனது. ‘விக்கி டோனர்’ என்ற இந்திப்படத்தை ரீமேக் செய்து தமிழில் ‘தாராள பிரபு’ என்ற பெயரில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்தார்.

‘காஸ்மே வாடே’ என்ற இந்திப்படம் தான் தமிழில் ரஜினி, பிரபு நடித்த ‘தர்மத்தின் தலைவன்’ ஆனது. ‘மிஸ்டர் இண்டியா’ என்ற இந்திப்படம், பாக்கியராஜின் நடிப்பில் ‘என் ரத்தத்தின் ரத்தமே’ ஆனது. பீ இமான் என்ற இந்திப்படம் நடிகர் திலகம் சிவாஜியின் ‘என் மகன்’ ஆனது. ‘ஹமராஷ்’ என்ற இந்திப்படம் அர்ஜூன் நடிப்பில் ‘கிரிவலம்’ ஆக வந்தது. ‘பிரம்மச்சாரி’ என்ற இந்திப்படம் சிவாஜியின் ‘எங்க மாமா’  என்ற பெயரில் வெளியானது.

இப்படியே 100 படங்கள் வரை இந்தியில் இருந்து தமிழுக்கு ரீமேக் ஆகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
ராம் சுதன்

Recent Posts