வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ஐசரி கணேஷ் தயாரிக்கும் படங்கள் தொடர்ந்து சொதப்பி வருகின்றன. சிம்புவை வைத்து பல கோடி பட்ஜெட்டில் கௌதம் மேனனை நம்பி ஐசரி கணேஷ் தயாரித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.
அந்தப் படத்துக்காக கடும் உழைப்பை போட்டும் பயன் கொடுக்கவில்லை என நினைத்த சிம்பு இனிமேல் கௌதம் மேனன் படங்களில் நடிக்க மாட்டேன் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார். கொரோனா குமார் படத்தை வேண்டாமென தவித்த சிம்பு வெந்து தணிந்தது காடு 2 படத்தையும் வேண்டாம் என கூறிவிட்டார். அதன் காரணமாகவே தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் சிம்பு இடையே பிரச்சனை வெடித்தது.
இதையும் படிங்க: மத்தவங்களுக்காக ஓடி ஓடி செய்றவரு! தம்பிக்காக செய்ய மாட்டாரா? லாரன்ஸ் கொடுத்த இன்பதிர்ச்சி
பத்து தல படத்தில் கௌதம் மேனன் வில்லனாக நடித்தாலும் அந்தப் படத்தின் நிகழ்ச்சிகளுக்கு அவரை அழைக்கவில்லை. மேலும், படக்குழுவினர் யாரும் கௌதம் மேனன் நடித்தது பற்றி கூட வாய் திறக்கவில்லை. பிரியா பவானி சங்கர் மட்டும் கௌதம் மேனன் நடிப்பை பாராட்டி பேசினார்.
இந்நிலையில், ஹிப்ஹாப் ஆதியை வைத்து PT சார் படத்தை தயாரித்துள்ள வேல்ஸ் நிறுவனத்துக்கு இந்தப் படமும் லாபகரமான படமாக அமையவில்லை என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்தின் கதை மற்றும் மேக்கிங் என மொத்தமாகவே சுமார் ரகம் தான் என கூறுகின்றனர்.
இதையும் படிங்க: மாமியாரு முன்னாடியே அந்த மாதிரி சீன்ல நடிச்ச நிழல்கள் ரவி… ‘ஐயையோ… அவங்க என்ன நினைச்சிருப்பாங்க’..?!
ஆனாலும், இரண்டாவது வாரத்திலும் படத்தை ஓட்ட ஹிப்ஹாப் ஆதி தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். இந்த வாரம் சூரியன் கருடன் மற்றும் விஜய் கனிஷ்கா வின் ஹிட் லிஸ்ட் படங்கள் மட்டுமே வெளியாகி உள்ள நிலையில் எளிதாக இந்த வாரம் தன்னுடைய படம் ஓடிவிடும் என நினைத்தார். ஆனால் சூரியின் படம் பாராட்டுகளைப் பெற்று வரும் நிலையில், ஹிப் ஹாப் ஆதியின் படம் இதற்கு மேல் வசூல் செய்வது கடினம் தான் என கூறுகின்றனர்.
இதுவரை பிடி சார் திரைப்படம் ஒட்டுமொத்தமாக வெறும் 4 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பதாகவும் படத்தின் பட்ஜெட் 10 கோடி ரூபாய் என சொல்லப்படும் நிலையில், இந்த படமும் ஐசரி கணேஷுக்கு நஷ்டத்தையே கொடுத்திருப்பதாக கூறுகின்றனர்.
இதையும் படிங்க: அஞ்சலியா இருக்கப்போய் தான் முடிஞ்சிது… இதுவே அந்த ஹீரோயினா இருந்தா? செஞ்சிருப்பாங்க… விளாசும் பிரபலம்!..
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…