பிரபு, தியாகராஜன், பாக்கியராஜ்!.. ஹிப் ஹாப் ஆதி படத்தில் இத்தனை பேரா?.. பிடி சார் டிரெய்லர் ரிலீஸ்!

Published on: May 16, 2024
---Advertisement---

பிளாக் ஷீப் யூடியூப் சேனலில் இயக்குனராக பல நிகழ்ச்சிகளை இயக்கி வந்த கார்த்திக் வேணுகோபாலன் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ரியோ ராஜை வைத்து நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா எனும் படத்தை இயக்கினார். அந்த படம் பெரிதாகப் போகவில்லை.

அதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்து தற்போது ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் பிடி சார் எனும் படத்தை அவர் இயக்கியுள்ள அதன் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. அடுத்த வாரம் மே 24-ஆம் தேதி அந்த படம் திரைக்கு வருகிறது.

இதையும் படிங்க: கவினை நம்பி காசை கொட்டலாமா?.. ’ஸ்டார்’ பட சொதப்பலால் சுதாரித்துக் கொண்ட நெல்சன்!..

இதில் ஸ்பெஷல் என்னவென்றால் ஏகப்பட்ட பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருப்பது தான். மீசைய முறுக்கு படத்தில் ஹிப் ஹாப் ஆதிக்கு அப்பாவாக விவேக் நடித்திருப்பார். அதே போல இந்த படத்தில் தந்தை கதாபாத்திரத்தில் பட்டிமன்ற பேச்சாளர் ராஜா நடித்திருக்கிறார். சிவாஜி படத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்கவே கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தவர் மீண்டும் தற்போது நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், வில்லனாக பிரசாந்தின் அப்பா தியாகராஜன், வழக்கறிஞராக பிரபு, நீதிபதியாக பாக்யராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். அம்மா கதாபாத்திரத்தில் தேவதர்ஷினி நடித்துள்ள நிலையில், ஹீரோயினாக காஷ்மிரா பர்தேசி நடித்துள்ளார்.

இதையும் படிங்க: மத்தவங்க பேசட்டும்!.. எனக்கு வேலை இருக்கு!.. இளையராஜா வெளியிட்ட வீடியோ…

மேலும், படத்தில் கதாபத்திரத்தில் அனிகா சுரேந்திரன் பள்ளி மாணவியாக நடித்திருப்பதும் அவரை சுற்றி இந்த படத்தின் கதை அமைந்திருப்பதும் படத்திற்கு பலமாக உள்ளது.

பள்ளிகளில் நடைபெறும் பாலியல் தொல்லை குறித்த படமாக இந்த பிடி சார் படம் உருவாகி இருப்பது டிரெய்லரை பார்த்தாலே தெரிகிறது. சிம்பு படங்களை தயாரித்து நஷ்டம் அடைந்த ஐசரி கணேஷ் ஹிப் ஹாப் ஆதி படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படமாவது வேல்ஸ் நிறுவனத்துக்கு வெற்றிப் படும்போது அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிங்க: தளபதி69 படத்தின் கதை இதுதானா? அதுசரி ஏற்கனவே இதே ஸ்டோரிக்கு பல்ப் வாங்கியது தானே!…

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.