
Cinema History
குஷ்புவை லவ் பண்ண வைக்கணும்… அதுக்காகதான் அப்படி செஞ்சேன்… பாண்டியராஜன் செய்த ட்ரிக்
இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து பிறகு கன்னி ராசி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பாண்டியராஜன்.
ஆனால் இயக்குனர் என்பதை விடவும் ஒரு நகைச்சுவை நடிகனாகதான் பாண்டியராஜனை பலருக்கும் தெரியும். அவரது இரண்டாம் திரைப்படமான ஆண்பாவம் திரைப்படத்தில் முதன் முதலாக நடிகராக அறிமுகமானார் பாண்டியராஜன்.

pandiarajan
ஆனால் அவரது உடல் பாவனைகள் நகைச்சுவைக்கு ஏற்றாற் போல இருந்ததால் அவர் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக நடிக்காமல் தொடர்ந்து நகைச்சுவை கதாநாயகனாகவே நடித்து வந்தார். படங்களில் சண்டை காட்சிகளில் நடித்தாலும் கூட அதுவும் நகைச்சுவையாகவே இருக்கும் என்கிற நிலை இருந்தது.
இந்த நிலையில்தான் கோபாலா கோபாலா என்கிற படத்தில் அவருக்கு ஜோடியாக குஷ்பு நடித்தார். அப்போது குஷ்பு மிக பிரபலமான நடிகையாக இருந்தார். குஷ்பு பாண்டியராஜை காதலிப்பது போன்ற காட்சி வைக்க வேண்டும். ஆனால் அது மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையிலும் இருக்க வேண்டும்.

kushboo
ஏனெனில் சண்டை போட்டோ அல்லது அழகால் அவர் குஷ்புவை ஈர்ப்பது போன்ற காட்சியை வைக்க முடியாது. இதற்காக யோசித்த பாண்டியராஜன் படத்தில் அவர்கள் இருவரும் லிஃப்ட்டில் மாட்டிக்கொள்வது போன்ற காட்சியை வைத்தார்.
அதில் அவர் லிஃப்டிலேயே சமைத்து குஷ்புவிற்கும் கொடுத்து அவரை ஈர்த்துவிடுவார். கோபாலா கோபாலா படத்தில் அது மிகவும் பிரபலமான காட்சியாக அமைந்தது. அந்த காட்சியால் மக்களும் குஷ்பு பாண்டியராஜனை காதலிப்பதை ஏற்றுகொண்டனர். இந்த விஷயத்தை பாண்டியராஜன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.