பட்டினி.. வறுமை.. எதிர் நீச்சல்.. ‘இந்தாம்மா ஏய்’ மாரிமுத்து பட்ட கஷ்டங்கள் பற்றி தெரியுமா?!...

by சிவா |
marimuthu
X

கடந்த சில மாதங்களாக சமூகவலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் நபராக நடிகர் மாரிமுத்து இருக்கிறார். கடந்த 10 வருடங்களுக்கும் மேல் தமிழ் சினிமாவில் நடித்து வருபவர்தான் இந்த மாரிமுத்து. கதாநாயகியின் அப்பா, அரசு அதிகாரி, வில்லனிடம் வேலை செய்யும் ஆள் என பல கதாபாத்திரங்களில் நடித்தவர். திடீரெனத்தான் அவர் பிரபலமானார். முகநூலில் அரைகுறை ஆடையில் ஒரு ஆண்ட்டி தனது புகைப்படத்தை பகிர்ந்து ‘உங்களிடம் பேச வேண்டும்’ என கேட்க இவரும் தனது செல்போன் எண்ணை பதிவிட்டிருந்தார். இதை கையில் எடுத்த நெட்டிசன்கள் அந்த ஸ்கீரீன்ஷாட்டை எடுத்து கிண்டலடித்து வைரலாக்கினார்.

marimuthu

ஆனால், அப்போதும் மாரிமுத்து அசையவில்லை. ‘ஆமாம். ஒரு பெண் கேட்டார்.. நம்பர் கொடுத்தேன்.. இதில் உங்களுக்கென்ன பிரச்சனை?’ என கெத்தாக பதில் சொன்னார். எங்கேயும் எப்போதும் தனது மனதில் என்ன நினைக்கிறாரோ அதை பேசுவார். இவர் பேசுவது சில சமயம் சர்ச்சையையும் உருவாக்கும். சமீபத்தில் ஜோதிடர்கள் கலந்து கொண்ட ஒரு டிவி நிகழ்ச்சியில் ‘நாடு நாசமா போனதுக்கு காரணமே ஜோசியக்காரர்கள்தான்’ என மாரிமுத்து பொங்க அந்த இடம் களோபரமானது. தான் நடிக்கும் படங்களில் ‘இந்தாம்மா ஏய்’ என கத்தி வசனம் பேசுவார். அதுவே இப்போது இவரின் அடையாளமாகிப் போனது.

இதையும் படிங்க: எனக்காக இதை நீங்கள் செய்வீங்களா?!. எம்.ஜி.ஆரிடம் மனைவி சதானந்தவதி வாங்கிய சத்தியம்!..

மாரிமுத்து தேனி மாவட்டத்தை சேர்ந்தவர். பாரதிராஜா போல ஆக வேண்டும் என ஆசைப்பட்டு சென்னை வந்தவர். நண்பர்களுடன் அறையெடுத்து தங்கி வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார். வறுமை வாட்டியது. சாப்பாட்டுக்கும் பிரச்சனை வந்தது. நண்பர்களை நம்பி வாழ்ந்தார். ஒருமுறை அவரின் நண்பர்கள் எல்லோரும் தீபாவளிக்கு ஊருக்கு சென்றுவிட இவரிடமோ பணம் இல்லை. அதனால் ஊருக்கும் போகவில்லை. வீட்டில் சாப்பாடுக்கு வழியில்லை. பசியில் அறையில் இருந்த ஊறுகாயை எடுத்து சாப்பிட்டு தண்னீரை குடித்து மூன்று நாட்களை ஓட்டியுள்ளார். இதனால் உடல் நிலையும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

marimuthu

பல முயற்சிகளுக்கு பின் அரண்மனை கிளி படத்தில் ராஜ்கிரணிடம் உதவியாளராக சேர்ந்தார். அதன்பின் சீமான், எஸ்.ஜே.சூர்யா, மணிரத்னம்,வசந்த் உள்ளிட்ட இயக்குனர்களின் படங்களில் உதவி இயக்குனராக வேலை பார்த்தார். 2008ம் வருடம் கண்ணும் கண்ணும் என்கிற படத்தை இயக்கினார். புலிவால் என்கிற படத்தை இயக்கி, அந்த படத்தில் நடிகராகவும் மாறினார். யுத்தம் செய், நிமிர்ந்து நில், கடைக்குட்டி சிங்கம், கொம்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

தற்போது சீரியலிலும் நடிக்க துவங்கிவிட்டார். மேலும், பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார். பல வருடங்கள் போராட்டங்களுக்கு பின் லைம் லைட்டுக்கு மாறி்யுள்ளார் மாரிமுத்து.

இதையும் படிங்க: ஷோபனா வீட்டில் திருட்டு! யாரும் இதுவரை கொடுக்காத தண்டனை! இப்படியும் ஒரு நடிகையா?

Next Story