Hit3 Review: நானி இந்த முறை ஹீரோவா வில்லனா? ஓவர் குழப்பத்தில் ஹிட் 3.. திரை விமர்சனம் இதோ!

by Akhilan |   ( Updated:2025-05-01 03:48:11  )
Hit3 Review: நானி இந்த முறை ஹீரோவா வில்லனா? ஓவர் குழப்பத்தில் ஹிட் 3.. திரை விமர்சனம் இதோ!
X

Hit3 Review: நானி நடிப்பில் மூன்றாம் பாகமாக வெளிவந்து இருக்கும் திரைப்படம் ஹிட்3. இப்படத்தின் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் பேசும் முழு திரை விமர்சனம் இதோ!

நானி தயாரிப்பில் விஷ்வக் சென் நடிப்பில் வெளியான திரைப்படம் ஹிட் முதல் கேஸ். இதை தொடர்ந்து நடிகர் அத்வியை வைத்து இரண்டாம் பாகத்தினையுமே நானி தயாரித்து இருந்தார். இந்நிலையில் மூன்றாம் பாகத்தினை தயாரித்து நானியே நடித்து இருக்கிறார்.

சைலேஷ் கோலனு இப்படத்தினை இயக்கி இருக்கிறார். கடுமையான போலீஸ் அதிகாரியின் சஸ்பென்ஸ் நிரம்பிய வாழ்க்கையை வெளிப்படுத்தும் அதிரடியான காவல் திரில்லராக வெளியாகியுள்ளது ஹிட்3. அர்ஜுன் சர்க்காராக என்னும் போலீஸ் அதிகாரியாக நானி நடிக்கிறார்.

முதல் காட்சியிலேயே கைதான நிலையில் காணப்படுகிறார். ஏன் அவர் கைது செய்யப்பட்டார் என்ற கேள்வி ரசிகர்களுக்கு ஆர்வத்தை தூண்டுகிறது. சிறையில் இருக்கும் போது, அர்ஜுன் தனது கடந்த காலத்தை ஒரு கைதியிடம் பகிர்ந்துக்கொள்கிறார். பின்னணியில், ஜம்மு மற்றும் காஷ்மீரில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய காலக்கட்டத்தில், தீவிரவாதிகளுக்கு எதிராக மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகள் மூலம் அவர் புகழ் பெற்றுள்ளார்.

இதே சமயம், இந்தியா முழுவதும் ஒரே நாளில் 13 கொலைகள் ஒரே மாதிரியான முறையில் நடைபெறுவது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த வழக்கை விசாரிக்க அர்ஜுன் நியமிக்கப்படுகிறார். தனது விசாரணையின் மூலம், ஒரு ரகசிய மற்றும் தீவிரமாக செயல்படும் கும்பலை அவர் கண்டறிவது படத்தின் முக்கிய திருப்பமாக அமைகிறது.

இதை தொடர்ந்து அவர் எப்படி ஜெயிலுக்குள் வந்தார். அந்த கும்பல் என்ன ஆனது என்பது தான் படத்தின் மிச்ச கதை. இதை வன்முறை, சஸ்பென்ஸ் மற்றும் சிக்கலான அரசியல் பின்னணிகளோடு சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர்.

முந்தைய ‘ஹிட்’ பாகங்களை போல இப்படத்தில் முக்கியமாக ஒரு விசாரணை சம்பவம் அல்லது குற்றவாளி கண்டுபிடிப்பது என கதை மையமாக இல்லை. இதற்குப் பதிலாக, இந்தப் படம் அதிகமான ஆக்சன், திரில்லர் மற்றும் திகில் காட்சிகளைக் கொண்டிருக்கிறது.

கதை குறைந்தது பெரிய அளவில் ரசிகர்களுக்கு எரிச்சலை தருகிறது. அதிலும் நானி இப்படத்தில் தன்னுடைய டிரேட் மார்க் லவ்வர் பாய் லுக்கை தொலைத்து இருக்கிறார். ஓவர் வன்முறையால் அவர் வில்லனோ என நினைக்க தோன்றுகிறது.

குடும்ப மற்றும் காதல் காட்சிகள் கூட படத்தில் சொற்பம் தான். சமுத்திரகனி நானியின் தந்தையாக நடித்துள்ளார். தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்து சென்றுள்ளார். முதல் பாதியில் ஏகப்பட்ட ரத்த காட்சிகள் மற்றும் கொடூரமான வசனங்களைப் பேசுகிறது.

இரண்டாம் பாதியில், தான் உண்மையான கதை தொடங்குகிறது. ஆனால் அதுக்கூட ஸ்குவிட் கேம், மணி ஹெஸ்ட் போன்ற பாப்புலர் வெப் சீரிஸை காப்பி அடித்து இருப்பதாக தோன்றுகிறது. ஆச்சரியப்படும் வகையில் தமிழ் ஹீரோ கார்த்திக் சிவகுமார் இதில் கேமியோ செய்து இருக்கிறார்.

தொழில்நுட்ப பக்கம், ஒளிப்பதிவு மற்றும் படப்பிடிப்பு சிறந்ததாக உள்ளது. காடுகளின் பின்புலமும், செட்டுகளும் அழகாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், சில இடங்களில் படம் மெதுவாக நகர்கிறது

மிகீ ஜே மெயரின் இசை படத்திற்கு சரியான அனுபவத்தை தருகிறது, ஆனால் அது மிக விரைவில் மறக்கப்படும் வகையில் உள்ளது. படத்தின் கதையில் புதுமை இல்லாமல், சில இடங்களில் முன்னைய திரைப்படங்களின் நகலெடுக்கப்பட்ட போல இருக்கின்றன.

Next Story