Connect with us

Cinema History

படத்திற்காக கதாபாத்திரமாக மாறி மீள முடியாமல் தவித்த ஹாலிவுட் நடிகர்…படம் வெளியாவதற்குள் உயிர் பிரிந்த சோகம்..!

நடிகர்களில் சிலர் உணர்வுப்பூர்வமாக நடித்து நடிக்கும் பாத்திரமாகவே தன்னை மாற்றிக் கொள்வர். இந்த நடிப்புக்கு மெத்தடு ஆக்டிங் என்று பெயர்.

இவர்கள் ஒரு கட்டத்தில் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவர். பலருக்கு தெரியாது. சிவாஜி ஒரு மெத்தடு ஆக்டர் என்று. இதை சொன்னவர் பிரபல மெத்தடு ஆக்டர் மார்லன் பிராண்டோ.

Sivaji joker

ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் முறைமை நடிப்பை ஏகலைவனாக ஏற்றவர் சிவாஜி. அவரது மெத்தடு நடிப்புக்கு ஒரு கிளாசிக் உதாரணம் தெய்வ மகன். அந்தப்படத்தின் 3 பாத்திரங்களின் பிடியில் சிக்கி அவர் பல நாள்கள் கஷ்டப்பட்டார்.

அவரது குடும்பத்தினர் படப்பிடிப்பு தளத்துக்கே வந்து விடுவர். அவரைக் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்வர் என இயக்குனர் திருலோகசந்தர் பேட்டி அளித்தார்.

நடிப்புன்னாலே புலி வேட்டை மாதிரி. ஷாட்ல அடிச்சி ஜெயிச்சி வரணும். இல்லேன்னா அந்த ஷாட்டே நம்மளை புலி மாதிரி சாப்பிட்டுரும் என சிவாஜி சொன்னார். நடிகன் தனது குடும்பத்தினரோடு ஓய்வைக் கழிக்க வேண்டும். இல்லை என்றால் நிச்சயம் பைத்தியம் பிடித்து விடும் என்பது அவரது அனுபவம்.

ஹாலிவுட் நடிகர் ஹீத் லெட்ஜர் ஒரு சமயம் நடிப்பில் உணர்ச்சிகரமாக நடித்து அந்த கதாபாத்திரமாகவே மாறி பின்னர் தன் கூட்டுக்கு திரும்ப முடியாமல் திணறி போன ஆத்மாவாக அலைந்தார்.

Joker 2020

2020ல் வெளியான ஜோக்கர் படம் பல ரசிகர்களுக்கு தூக்கத்தை இழக்க வைத்திருக்கும். இதுவரை 8 படங்களில் 8 நடிகர்கள் ஜோக்கர் பாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள். அவர்களில் சிலருக்கு ஆஸ்கர் விருதுகளும் கிடைத்துள்ளன. ஜோக்கர் ஒரு சவாலான பாத்திரம்.

தி டார்க் நைட் (2007)டில் ஜோக்கராக நடித்தார் ஹீத் லெட்ஜர். எதுக்கு இவ்வளவு சீரியஸா இருக்க என வேதனையை மறைத்து பீறிடும் அவரது சிரிப்பு சில்லிட வைக்கும்.

Heeth

ஹீத் ஒரு ஆஸ்திரேலியர். தி டார்க் நைட் வாய்ப்பு கிடைத்த போது நடிப்புத் தொழிலின் உச்சத்தில் இருந்தார். ஆனால் படப்பிடிப்பு முடிந்த போது தொடர்ந்து தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டார்.

நியூயார்க் டைம்ஸ்க்கு அளித்த பேட்டியில் ஜோக்கர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தன்னைக் கரைத்து விட்டதாகக் கூறினார். லெட்ஜர் வாரம் முழுவதும் என்னால் சராசரியாக 2 மணி நேரம் கூட தூங்க முடிவதில்லை.

மனம் தொடர்ந்து துடிப்பதை என்னால் நிறுத்த முடியவில்லை. என் உடல் கிட்டத்தட்ட வெறும் கூடாகி விட்டது. ஆவி மட்டுமே பாக்கியிருக்கிறது என்று சொன்னார்.

ஒரு விபத்தின் எல்லையில் அவர் இருப்பதை உணர்த்திய சிக்னல் அது. அவர் உள்பட யாரும் அதை சரியாக புரிந்து கொள்ளவில்லை. படத்திற்கான புரோமோசன் என்று கூட பத்திரிகைகள் கேலி செய்தன.

Heeth 2

அடுத்த படத்திற்காக தன்னை தயார் செய்ய ஒரு ஹோட்டலில் அறை எடுத்து ஹீத் தன்னை தானேப் பூட்டிக் கொண்டது பின்னாள்களில் தான் தெரியவந்தது. 2007ல் எம்பயர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தன் அனுபவத்தை லெட்ஜர் விவரிக்கிறார்.

நான் ஜோக்கராக மாற வேண்டியிருந்தது. அதற்காக ஜோக்கர் காமிக்ஸ் புத்தகங்கள் அனைத்தும் வாங்கின. பக்கம் விடாமல் படித்தேன். கண்கள் மூடி ஒரு தியானம் போல ஜோக்கர் பாத்திரத்தில் என்னை மூழ்கடித்தேன்.

ஒரு ஹோட்டல் அறையில் என்னை பூட்டிக் கொண்டு ஒரு குறிப்பு நோட்டில் ஜோக்கரை எழுதி உருவாக்கினேன். என்னை நானே ஜோக்கராக மாற்ற ஆரம்பித்தேன். பல்வேறு குரல்களில் பேசிப் பேசி குரலை சோதித்தேன்.

ஜோக்கருக்கு ஒரு மாதிரியான குரல் வேண்டும். பீறிட்டு சிரிக்க வேண்டும். ஜோக்கருக்கு அந்த குரல் முக்கியம். ஜோக்கர் கிட்டத்தட்ட ஒரு மனநோயாளி. அவனது உலகம் தனி உலகம்.

அவனது செயல்களுக்கு அவன் பொறுப்பில்லை. மனசாட்சி இல்லாதவன். முழுமையான சமூக விரோதி. கூலான கொலைகார கோமாளி. மாதத்தின் முடிவில் அந்த அறையில் ஜோக்கர் பிறந்தான். ஹோட்டலில் இருந்து வெளியேறியது நான் அல்ல. ஜோக்கர்.

Heeth 3

பின்னாள்களில் அவரது தந்தை கிம் தனது மகனது அந்த டைரியில் இருந்த சில செய்திகளைப் படித்தார். அதில் ஜோக்கர் பாத்திரத்துக்கான முழு விவரங்கள் இருந்தன. கடைசி பக்கத்தில் பெரிய எழுத்துகளில் போய் வருகிறேன் ;என்றும் எழுதப்பட்டு இருந்தது. அந்த வார்த்தைகள் மனதை பிசைந்தன என அவரது தந்தை கூறினார்.

அவன் ஜோக்கர் கதாபாத்திரத்தை மேம்படுத்தி யிருக்கிறான். பொதுவாகவே அது ஹீத்தின் குணம் தான். எப்போதுமே அவன் தனது கதாபாத்திரங்களுக்குள் நுழைவதற்கு நாள்கணக்கில் போராடுவான்.

ஜோக்கர் படம் அந்த முயற்சியின் உச்சம் என்று கூறினார். 2008ல் ஹீத் படுக்கை அறையில் சடலமாகக் கிடந்தார். அவரது பிரேத பரிசோதனையில் மனப்பிறழ்வுக்கு உள்ள மருந்துகளை அதிகமாக எடுத்துள்ளார் என்பது தெரியவந்தது.

அவர் உயிருடன் இருக்கையில் தி டார்க் நைட் படம் வெளியாகவில்லை. படம் வெளியானது. திரையில் ஜோக்கராக வந்த ஹீத்தின் நடிப்பைப் பார்த்து உலகம் முழுவதும் ரசிகர்கள் உறைந்து போனார்கள். ஒரு பில்லியன் டாலர்களை வசூலித்து சாதனை படைத்தது. ஆஸ்கர் உள்பட எண்ணற்ற பரிசுகளை மரணத்திற்குப் பிறகு வென்றார் ஹீத்.

Heeth kallarai

இப்போது ஹீத்தின் நினைவுச்சின்னம் பெர்த்தில் உள்ளது. ஸ்வான் நதிக்கரையில் உள்ள இந்த நினைவுச்சின்னத்தில் 2 பளிங்கு சதுரங்கப் பலகைகளைக் கொண்டுள்ளது.

சதுரங்க ஆட்டத்தின் கட்டங்களில் சிக்கி திரும்பி வர முடியாமல் ஸ்டால்மேட்டில் மாட்டிக் கொண்ட ஹீத் லெட்ஜர் இளவயதில் தேசிய செஸ் சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema History

To Top