ஒரே இயக்குனர்....பட்டி தொட்டி எல்லாம் சக்கை போடு போட்ட ஹாலிவுட் படங்கள்
ஹாலிவுட் படங்களில் பிரபல இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத்திறன் கொண்டவர் ஜேம்ஸ் கேமரூன். இவர் கனடாவைச் சேர்ந்தவர். ஆழ்கடலை ஆராய்ச்சி செய்பவரும் இவர் தான்.
இவர் இயக்கியப் படங்கள் என்றால் பிரம்மாண்டமும், கொண்டாட்டமும், ஆர்ப்பாட்டமும், ஆரவாரமும் என நம்மை திகைப்பூட்டும் அளவில் இருக்கும். பட்டி தொட்டி எல்லாம் இவரது படங்கள் சக்கை போடு போடும். இவரது படங்கள் விருதுகளை வாரிக்குவித்தன. அவற்றில் ஒரு சிலவற்றை பார்க்கலாமா...
டெர்மினேட்டர்
1984ல் வெளியான இந்தப்படம் ஹாலிவுட் ரசிகர்களுக்கு ஒரு விருந்து. இது ஒரு அறிவியல் படம். ஆணழகன் அர்னால்டு சுவாசநேகர் டெர்மினேட்டராக வந்து கலக்கியிருப்பார். அவருடன் இணைந்து மிக்கேல் பீன், லிண்டா ஹாமில்டன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஏலியன்ஸ்
1986ல் இந்தப்படத்தை இயக்கியதும் ரசிகர்கள் இவரைக் கொண்டாடத் தொடங்கி விட்டனர். அன்று முதல் பிரபலமான ஹாலிவுட் இயக்குனரானார். அறிவியல் கதை அம்சம் கொண்ட ஒரு திகில் படம். படம் காட்சிக்குக் காட்சி ரசிக்கும்படியாக இருந்தது.
டெர்மினேட்டர் 2
இந்தப்படத்தை இயக்கியதும் முதல் பாகத்தைப் போல் கொஞ்சமும் குறையாமல் பிரம்மாண்டம் இருந்தது. அதே நேரம் தொழில்நுட்பத்திலும் புதிய யுக்தி கையாளப்பட்டு ரசிக்கப்பட்டது. அதே நேரம் தொழில்நுட்பத்திலும் புதிய யுக்தி கையாளப்பட்டு ரசிக்கப்பட்டது.
அர்னால்டு சுவாசநேகர், லிண்டா ஹாமில்டன், எட்வர்ட் பெர்லோங் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் விஷ_வல் எபெக்ட்டுக்காக இந்தப்படத்தை நமக்கு பிரம்மாண்டமாகக் காட்டுகிறது. படத்தில் தீய எந்திரங்களிடமிருந்து நல்லவர்கள் காப்பாற்றப்படுகிறார்கள். இதில் நல்லவர்களைக் காப்பாற்றும் தானியங்கி இயந்திரமாக வருவது தான் அர்னால்டு சுவாசநேகர்.
டைட்டானிக்
1997ல் இந்தப்படத்தை இயக்கினார். 11 ஆஸ்கர் விருதுகளைப் பெற்றது. சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த படத்தொகுப்பு என நம்மை பிரமிப்பூட்டியது.
ஒரிஜினல் கப்பல் டைட்டானிக் பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கிய சம்பவத்தை மையமாகக் கொண்டு படத்தை எடுத்தார். நாமும் கப்பலில் ஓர் பயணி ஆகி படத்தைக் கொண்டாடத் துவங்கிவிட்டோம். அவ்வளவு பிரம்மாண்டமும் இரண்டாக உடைந்து கடலில் மூழ்கும் போது நம்மால் திகைக்காமல் இருக்க முடியவில்லை.
லியானார்டோ டிகாப்ரியாவும், கேதே வின்ஸ்லெட்டும் நமக்குள் ஒரு பெரிய தாக்கத்தை உண்டுபண்ணிவிட்டார்கள். இவர்களது நடிப்பு படத்தில் மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது.
அதுவும் கப்பலின் நுனியில் நின்று அடிக்கும் இதழ் முத்தம் இளம் ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. ஓவியராக வரும் ஹீரோ, நிர்வாண கோலத்தில் ஹீரோயினை படுக்க வைத்து வரையும் ஓவியம் நம்மை குதூகலப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் சூடேற்றவும் செய்தது.
அவதார்
2009ல் வெளியான ஒரு அறிவியல் படம். இந்தப்படத்தில் வரும் கற்பனை கதாபாத்திரங்களில் வித்தியாசமான பறக்கும் மனிதர்களையும் மிருகங்களையும் கண்டு ரசிக்கலாம். நீளமான காதுகளையும், வாலையும், இறக்கைகளையும் உடைய நீல நிற மனிதர்கள் நம்மைப் பிரமிக்க வைக்கிறார்கள்.
இது 3டி படமாக வந்து நம்மை மேலும் ரசிக்கச் செய்தது. ரூ.1500 கோடி செலவில் எடுக்கப்பட்டது. டைட்டானிக் படத்தின் சாதனையை முறியடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.