Connect with us
viji

Cinema News

ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்ட விஜயகாந்தின் படம்! ஏன் மக்கள் ஏத்துக்கலனு தெரியல – வருத்தத்தில் பேசிய நடிகை

Captain Vijayakanth: தமிழ் சினிமாவில் ஒரு நடிகரை கடவுள் ரேஞ்சுக்கு கொண்டாடுகிறார்கள் என்றால் எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக அந்த இடத்தில் இருப்பது நடிகர் விஜயகாந்த். அவரால் பலனடைந்தவர்கள் ஏராளம்.

ஆனால் விஜயகாந்த மற்றவர்களுக்கு செய்த உதவியை ஒருபோதும் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும் என்று என்றைக்கும் நினைத்ததில்லை. மற்றவர்களுக்குப் போகத்தான் நமக்கு என்று இன்றுவரை வாழ்ந்தவர் விஜயகாந்த்.

இதையும் படிங்க: எம்ஜிஆர் மாதிரி வரனும்! ஆனால் அவர் செஞ்சத மட்டும் செய்ய மாட்டேன் – விஜயால் கடுப்பில் கோடம்பாக்கம்

எம்ஜிஆர் போலவே தன் படங்களின் மூலமாக பல நல்ல கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைத்தவர் விஜயகாந்த். இந்த நிலையில் பிரபல நகைச்சுவை நடிகை மைதிலி விஜயகாந்தை பற்றி அவருடைய அனுபவங்களை ஒரு பேட்டியின் மூலமாக பகிர்ந்தார்.

ராசுக்குட்டி என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலாக அறிமுகமானவர் நடிகை மைதிலி. குண்டுப் பெண்மணியாக தன்னுடைய வெகுளித்தனமான நடிப்பால் அனைவரையும் சிரிக்க வைத்தவர்.

இதையும் படிங்க: ஆல் ஷோ ஹவுஸ்புல்!.. ரீ ரிலீஸிலும் கல்லா கட்டும் வட சென்னை!.. இவ்வளவு கூட்டமா?!…

வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் செவிலியராக நடித்திருப்பார்.விஜயகாந்துடன் இணைந்து தாயகம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அவர் கூறும் போது தாயகம் திரைப்படம் ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்ப்பட்ட திரைப்படம்.

ஆனால் என்ன காரணத்திற்காகவோ அந்தப் படம் மக்களிடையே வரவேற்பை பெறவில்லை என்று கூறினார். ஏ.ஆர்.ரமேஷ் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தயாகம்.இந்தப் படத்தில் விஜயகாந்துடன் இணைந்து நெப்போலியன் மற்றும் அருண்பாண்டியன் ஆகியோரும் நடித்திருப்பார்கள்.

இதையும் படிங்க: விடாமுயற்சிக்கு வந்த சிக்கல் மட்டும் இல்ல! கலை இயக்குனர் மிலனின் மறைவால் சிக்கி தவிக்கும் படங்கள்

தேவா இசையில் வெளிவந்த இந்த தாயகம் திரைப்படம் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவில் வசூலை பெறவில்லை.தமிழ் மாநில திரைப்பட விருதில் சிறந்த நடிகருக்கான சிறப்புவிருது விஜயகாந்துக்கு கிடைத்தது. மேலும் மன்சூர் அலிகானும் சிறப்பான நடிப்பை இந்த படத்தின் மூலம் வெளிப்படுத்தியிருப்பார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top