Connect with us

Cinema News

எவ்வளவு சம்பளம் வேணும்னாலும் தரோம்!. ரஜினி ப்ராஜக்ட்டில் களம் இறங்கும் கே.ஜி.எஃப் குழு!..

பெரிய ஹீரோவும், சிறந்த இயக்குனரும் ஒன்று சேர்ந்தால் நல்ல ஹிட் கொடுக்க வேண்டும் என்பதற்கு ஆதாரமாக இருந்து வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். கமல் நடித்து அவர் இயக்கிய விக்ரம் படத்தின் ஹிட்டை தொடர்ந்து தமிழ் சினிமாவே லோகேஷ் கனகராஜை திரும்பி பார்த்தது என்றுதான் கூற வேண்டும்.

இந்த நிலையில் தற்சமயம் தயாரிப்பாளர் லலித் இயக்கத்தில் விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பிறகு அவர் கைதி 2 படத்தை இயக்கவிருக்கிறார். அதற்கு பிறகு ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் திரைப்படம் எடுக்க இருக்கிறார்.

இந்த திரைப்படம் கண்டிப்பாக பெரும் ஹிட் கொடுக்கும் என்பது தமிழ் சினிமாவின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ரஜினி அடுத்ததாக ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் படத்தில் நடிக்கவிருக்கிறார். அதற்கு பிறகு லோகேஷ் பட வேலைகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தயாரிப்பாளர்கள் போட்டி:

ஆனால் இந்த படத்திற்கு தயாரிப்பாளர்கள் பெரும் போட்டி போட்டு வருகின்றனர். சன் பிக்சர்ஸ், லைக்கா என பல பெரிய நிறுவனங்கள் ஏற்கனவே இதுக்குறித்து லோகேஷிடம் பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கே.ஜி.எஃப் படத்தை இயக்கிய ஹம்பாலே பிலிம்ஸ் ஏற்கனவே லோகேஷ் கனகராஜை இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டிருந்தது. இதற்காக அவருக்கு அட்வான்ஸ் தொகையும் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்சமயம் அந்த ரஜினி படத்தை ஹம்பாலே பிலிம்ஸ் தயாரிக்க திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

இதற்காக லோகேஷ் கனகராஜூடம் 60 கோடி வரை சம்பளம் பேசியுள்ளதாக செய்திகள் வலம் வருகின்றன. ஆனால் எந்த தயாரிப்பாளருடன் படம் பண்ண வேண்டும் என்பதை ரஜினிதான் முடிவு செய்ய வேண்டும் என்பதால் அவர் பதிலுக்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜ் இப்ப பண்ணுனதை நான் அப்பவே பண்ணுனேன்! – சத்யராஜ் சொன்ன அதிர்ச்சி தகவல்!..

google news
Continue Reading

More in Cinema News

To Top