Connect with us

அடுத்த ராக்கி பாய் சூர்யா தான்.!? வெளியான அதிரடி அறிவிப்பு.! திணறும் இன்டர்நெட்.!

Cinema News

அடுத்த ராக்கி பாய் சூர்யா தான்.!? வெளியான அதிரடி அறிவிப்பு.! திணறும் இன்டர்நெட்.!

ஏப்ரல் 14ஆம் தேதி உலகம் முழுக்க வெளியான கேஜிஎப் 2 படத்தின் தாக்கம் தற்போது வரை குறையாமல் தியேட்டர்களில் வசூல் குவிந்து வருகிறது. இத்தனை வருட கடுமையான உழைப்பிற்கு கேஜிஎப் படக்குழுவுக்கு தற்போது உரிய வரவேற்பை கொடுத்து வருகிறது கே.ஜிஎப்-2 படத்தின் பிளாக் பஸ்டர் வசூல்.

இந்த படத்தை அடுத்ததாக ஒரு புதிய படத்தை தயாரிக்க உள்ளதாக கே.ஜி.எப் 2 பட தயாரிப்பு நிறுவனம் ஹோம்பலே நிறுவனம் சில தினங்களுக்கு முன் ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அப்போது இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமானது. எந்த ஹீரோ படத்தை, எந்த இயக்குனர் படத்தை தயாரிக்க உள்ளது என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

அவர்கள் காத்திருப்பிற்கு இன்று விடை கிடைத்துள்ளது. சூரரைப் போற்று இயக்குனர் சுதா கொங்கரா அடுத்து இயக்க உள்ள புதிய படத்தை கே.ஜி.எப்  பட நிறுவனம்தான் தயாரிக்க உள்ளதாக அறிவிப்பை அதிகாரபூர்வமாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை கேள்விப்பட்ட உடன் சூர்யா ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படியுங்களேன் – அக்ரிமெண்டால் வந்த சோதனை.! புலம்பும் திரையரங்குகள்.! கூவி கூவி விற்கப்படும் பீஸ்ட் டிக்கெட்ஸ்.!

ஏனென்றால் சுதா கொங்கரா தற்போது பாலா – சூர்யா இணைந்துள்ள படத்தில் வேலை செய்து வருகிறார். அது முடிந்த பின்னர் சூர்யா படத்திற்கான வேலைகளை தான் அவர் ஆரம்பிக்க உள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது. ஆகவே சூர்யா மற்றும் இயக்குனர் சுதா கொங்கரா சூரரைப்போற்று படத்திற்கு பிறகு இணையும் படத்தை கேஜிஎப் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது என அவர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த படம் ஓர் கேங்ஸ்டர் கதை களமாக உருவாக உள்ளதாம். ஏற்கனவே ராக்கி பாய் ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் அடுத்ததாக சூர்யாவின் அடுத்த பட அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top