சினிமாவைப் பொறுத்தவரை திகில் படங்கள் என்பவை மிகவும் முக்கியமானவை அதற்கென்று ஒரு வரவேற்பும் எல்லா காலங்களிலுமே சினிமாவில் இருந்து வருகிறது. பேய் படங்களை பார்க்க பயப்படுபவர்கள் கூட கண்ணை மூடிக்கொண்டு முழு படத்தையும் பார்ப்பதுண்டு அந்த அளவிற்கு திகில் படங்களுக்கு வரவேற்பு உண்டு.
தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களை பயப்பட வைத்த சில பேய் படங்களை இப்போது பார்க்கலாம்
சிவி
தாய்லாந்தில் வெளியான ஷட்டர் என்கிற திரைப்படத்தின் தழுவலாக தமிழில் எடுக்கப்பட்ட திரைப்படம் சிவி. இந்த திரைப்படம் வெளியான பொழுது பெரிதாக எந்த வரவேற்பையும் பெறவில்லை. ஆனால் அதற்குப் பிறகு சின்னத்திரைக்கு வந்த பொழுது இந்த படத்தை பார்த்து பயந்தவர்கள் பலர்.

கதாநாயகனால் ஏமாற்றப்பட்ட பெண் கதாநாயகன் மற்றும் அவனது நண்பர்களை பேயாக வந்து பழி வாங்குவதே படத்தின் கதையாக இருக்கும். அதில் பேயாக வரும் பெண்ணும், படத்தின் கடைசி காட்சிகளும் உச்சபட்ச பயத்தை கிளப்புவதால் 90ஸ் கிட்ஸ் மத்தியில் எப்பொழுதும் அதிகபயத்தை ஏற்படுத்திய திரைப்படமாக சிவி உள்ளது.
ஜென்ம நட்சத்திரம்:
ஹாலிவுட்டில் வெளிவந்த ஓமன் என்கிற திரைப்படத்தை இயக்குனர் தக்காளி சீனிவாசன் தமிழில் ஜென்ம நட்சத்திரம் என்கிற பெயரில் படமாக எடுத்தார்.
கடவுளின் குழந்தையாக இயேசு பிறந்தது போல சாத்தானின் குழந்தையாக ஒரு குழந்தை பூமியில் பிறக்கிறது. அது செய்யும் திகில் விஷயங்களே படத்தின் கதையாக இருக்கிறது.
வா அருகில் வா

ஹாலிவுட்டில் தொடர்ந்து பொம்மையை பேயாக வைத்து திரைப்படங்கள் வந்து கொண்டிருந்த காலத்தில் தமிழில் அதே போல எடுக்கப்பட்ட திரைப்படம் வா அருகில் வா. கணவரின் குடும்பத்தால் சூழ்ச்சியாக கொல்லப்படும் பெண் ஆவியாக ஒரு பொம்மைக்குள் செல்ல அந்த பொம்மை அவர்களை பழிவாங்குவதே படத்தின் கதையாக உள்ளது.
ஜெகன் மோகினி

90ஸ் கிட்ஸ்களை மட்டும் அல்லாமல் 80ஸ் கிட்ஸ் முதல் அனைவரையும் பயபட வைத்த திரைப்படம் ஜெகன் மோகினி. தமிழ் சினிமாவில் பல காலங்களுக்கு ஜெகன்மோகனியை பார்த்து பயந்தவர்கள் இருந்தனர். கடந்த ஜென்மத்தில் காதலனோடு சேர முடியாமல் ஆவியான மோகினி பிறகு தனது காதலனை அடுத்த ஜென்மத்தில் அடைவதற்காக ஆவியாக திரிகிறாள். அவள் அந்த காதலனை அடைய செய்யும் முயற்சிகளே படத்தின் கதையாக உள்ளது.
நாளைய மனிதன்

இயக்குனர் வேலு பிரபாகரன் தமிழில் பல ஹாலிவுட் படங்களை ரீமேக் செய்துள்ளார். அப்படி அவர் செய்த ஒரு திரைப்படம்தான் நாளைய மனிதன். ஹாலிவுட்டில் வெளிவந்த பிரபல நாவலான ப்ராங்கன்ஸ்டைன் என்னும் நாவலின் கதையை தழுவலாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் நாளைய மனிதன்.
இறந்து போன மனிதனுக்கு ஊசி போட்டு மீண்டும் உயிர் கொடுக்கும்பொழுது அவன் ஒரு ராட்சசனாக மாறி மக்களை கொல்ல துவங்குகிறான். அதனை கதாநாயகன் எப்படி தடுக்கிறார் என்பதாக படத்தின் கதை சொல்லும்.