ரஜினியை வெளியே துரத்திய ஹோட்டல் மேனேஜர்!.. அவமானத்தை தாண்டி சாதித்த சூப்பர்ஸ்டார்...

பெங்களூரில் பேருந்து நடத்துனராக வேலை செய்து பின் நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு சென்னை வந்து திரைப்படக்கல்லூரியில் பயிற்சி எடுத்தவர் ரஜினிகாந்த். அப்போது அவரின் பெயர் சிவாஜி ராவ். திரைப்படக்கல்லூரியில் 2 வருடம் படித்ததால் நடத்துனர் வேலைக்கு போகவில்லை.

ஒருகட்டத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் மீண்டும் சொந்த ஊருக்கு போனார். ஆனால், அவர் வேலையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். சினிமாவிலும் வாய்ப்பு இல்லை வேலையும் போய்விட்டது என்ன செய்யலாம் என யோசித்து மீண்டும் சென்னை வந்து வாய்ப்பு தேடினார்.

இதையும் படிங்க: ஜோதிகா நடித்த படத்தை பார்த்து கண்கலங்கிய ரஜினி! அந்தப் படத்துக்கா இவ்ளோ எமோஷன்?

அதன்பின் பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்து அவர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்தார். அதன்பின் மூன்று முடிச்சி, அவர்கள் என பல படங்களில் கமலுடன் இணைந்து நடித்த ரஜினி ஒருகட்டத்தில் பைரைவி படம் மூலம் ஹீரோவாக நடிக்க துவங்கினார்.

அதன்பின் அவரின் காட்டில் மழைதான். வசூல் மன்னனாக மாறி சூப்பர்ஸ்டாராகவும் மாறினார். ஆனால், நடிப்பு கல்லூரியில் பயிற்சி எடுத்துவிட்டு சினிமாவில் வாய்ப்பு இல்லமால் அலைந்து திரிந்தபோது அவரின் வாழ்க்கை கடினமாக இருந்தது. ஒரு சின்ன அறையில் தங்கி இருந்தார். சூடு காரணமாக அந்த அறையில் தங்க முடியாது. எனவே, பகலில் வெளியே சுற்றிவிட்டு இரவு மட்டுமே அந்த அறையில் படுத்து தூங்குவாராம்.

இதையும் படிங்க: ஜோதிகா நடித்த படத்தை பார்த்து கண்கலங்கிய ரஜினி! அந்தப் படத்துக்கா இவ்ளோ எமோஷன்?

அந்த விடுதியில் சாப்பாடு நன்றாக இருக்காதாம். ஆனாலும் வேறு வழியில்லாமல் சாப்பிட்டு வந்திருக்கிறார். ரஜினியுடன் நடிப்பு கல்லூரியில் படித்த நண்பர் ஒருவர் ஒரு நட்சத்திர ஹோட்டலில் வேலை செய்து வந்திருக்கிறார். அடிக்கடி ரஜினியை அங்கு அழைத்து சென்று ஹோட்டல் நிர்வாகத்திற்கு தெரியாமல் சாப்பிட வைப்பாராம்.

இது ஒருநாள் ஹோட்டல் மேனேஜருக்கு தெரியவர ரஜினியை சட்டையை பிடித்து வெளியே தள்ளி இருக்கிறார். இப்படியெல்லாம் பல அவமானங்களை சந்தித்துவிட்டுதான் சினிமாவில் நுழைந்து இந்திய அளவில் பெரிய நடிகராகவும் மாறினார்.

 

Related Articles

Next Story