தனுஷின் மகன் சிக்கியது இப்படித்தான்!. இது எப்போது நடந்தது தெரியுமா?...

Dhanush son: நடிகர் தனுஷ் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் 2004ம் வருடம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள். முத்தவர் பெயர் லிங்கா. இளையவர் பெயர் யாத்ரா. அப்பா நடிகர், தாத்தா சூப்பர்ஸ்டார் என்பதால் மிகவும் செல்லமாகவும், ரிச்சாகவும் வளர்ந்தவர்கள் இவர்கள்.

இவர்களின் புகைப்படங்கள் கூட மிக அரிதாகத்தான் வெளியாகும். தனுஷ் ஐஸ்வர்யாவை பிரிந்த போதும் அப்பா, அம்மா என இருவருடன் நேரம் செலவழித்து வருகிறார்கள். தீபாவளி அன்று கூட அம்மாவுடன், தாத்தா ரஜினியுடன் நேரம் செலவழித்தனர். அதிலும், தனுஷ் ரஜினிக்கு வீட்டிற்கு அருகிலேயே வீடு கட்டிக்கொண்டு வந்துவிட்டார்.

இதையும் படிங்க: பிக்பாஸ் தமிழின் இந்த வார எலிமினேஷன் இவரா? வட போச்சா? கடுப்பான ரசிகர்கள்..!

எனவே, இரண்டி வீட்டிலும் இருப்பது லிங்காவுக்கும், யாத்ராவுக்கும் வசதியாக போனது. ஐஸ்வர்யா இப்போது லால் சலாம் படத்தை இயக்கி முடித்துள்ளார். இதில், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க ரஜினி ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். இந்த படம் அடுத்த வருடம் ஜனவரி 26ம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் போக்குவரத்து விதியை மீறி பைக்கை ஓட்டியதற்காக தனுஷுன் மூத்த மகன் லிங்காவுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்ட விஷயம் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.. தனுஷின் வீட்டிற்கே சென்று அதிகாரிகள் நோட்டீசை கொடுத்துவிட்டனர். இதற்கு பின்னணியில் என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்வோம்.

லிங்காவுக்கு 17 வயதுதான் ஆகிறது. எனவே, சட்டப்படி அவர் இருசக்கர வாகனத்தை ஓட்டக்கூடாது. ஏனெனில், அவரின் லைசென்ஸ் கிடையாது. ஆனால், லிங்கா அடிக்கடி அப்பா வீட்டுக்கும், தாத்தா வீட்டிக்கும் ஒரு பைக்கில் சென்று வந்துள்ளார்.

அப்படி வரும்போது செய்தி தொலைக்காட்சி ஒன்று அதை வீடியோ எடுத்து செய்தியாக ஒளிபரப்பிவிட்டது. விஷயம் வைரலானதால் போக்குவரத்து போலீசாரும் அவருக்கு அபராதம் விதித்து விட்டனர். அதேபோல், இந்த சம்பவம் நடந்து 2 வாரங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இது எல்லா இடத்திலும் நடப்பதுதான். ஆனால், தனுஷுன் மகன் என்பதால் இது ஒரு செய்தியாக வெளிவந்துவிட்டது. அவ்வளவுதான்..

இதையும் படிங்க: வகுப்பு பெஞ்சில் தாளம் போட்டு கானா பாட்டு!.. விஜய் ஆண்டனி இசையமைப்பாளர் ஆனது இப்படித்தான்!..

 

Related Articles

Next Story