Connect with us
sudhakar

Cinema History

மது – மாது.. தடம்புரண்ட சுதாகரின் வாழ்க்கை!.. கனவு நாயகன் கோமாளி ஆன கதை!..

Beta Sudhakar ஆந்திராவை சேர்ந்த சுதாகருக்கு சினிமா நடிகாராக வேண்டும் என்பது ஆசை. சென்னை வந்து நடிப்பு கல்லூரியில் பயிற்சி எடுத்தார். இவருடன் தங்கி படித்தவர்தான் தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி. ஒரு நட்சத்திர ஹோட்டலில் இவரை பார்த்த பாரதிராஜா தான் இயக்கிய ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் நடிக்க வைத்தார்.

அந்த படம் 365 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இதனால், ராதிகார் – சுதாகர் ராசியான ஜோடியாக பார்க்கப்பட்டனர்.. சுதாகருக்கு தொடர் வாய்ப்புகள் வந்தது.. ஒரு வருடத்தில் 7 படங்களில் நடித்தார். மாந்தோப்பு கிளியே, பொண்ணு ஊருக்கு புதுசு, நிறம் மாறாத பூக்கள், சுவரில்லாத சித்திரங்கள் என பல படங்களிலும் நடித்தார். வித்தியாசமான ஹேர் ஸ்டைல்.. அப்பாவியான முகம் என பெண்களை கவர்ந்தார்.

இதையும் படிங்க: ரயிலிலேயே ஒரு படத்துக்கு எல்லா பாட்டையும் போட்ட இளையராஜா!.. அட அந்த படமா?!..

கிழக்கு போகும் ரயில் வெளியாகி அடுத்த 3 வருடங்கள் சுதாகர் பிஸியான நடிகராக வலம் வந்தார். 1980ம் வருடம் மட்டும் 11 படங்களில் நடித்தார். இதில் பெரும்பாலான படங்கள் வெற்றிப்படங்களே. வெற்றி கொடுத்த மிதப்பில் மது – மாது என உல்லாச வாழ்க்கைக்கு அடிமையானார் சுதாகர்.

மது போதையிலேயே படப்பிடிப்புக்கு வருவது, ஆறு மணிக்கு மேல் படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் இருப்பது என அவரின் பெயர் கெட்டுப்போனது. இதனால், அவர் நடிப்பில் உருவான சில படங்கள் பாதியிலேயே நின்றது. சில படங்கள் வெளிவரவில்லை. ‘நீ ஆந்திராவை சேர்ந்தவன் என்பதால் உன்னை நிராகரிக்கிறார்கள். நீ ஆந்திரா போய் தெலுங்கு படங்களில் நடி’ என நண்பர்கள் சொல்ல டோலிவுட் பக்கம் போனார்.

இதையும் படிங்க: பாரதிராஜாவால் ரிஜக்ட் செய்யப்பட்டு பெரிய ஆளான நட்சத்திரங்கள்!.. யார் யார்னு தெரியுமா?

ஒருமுறை ஒரு தெலுங்கில் படத்தில் தன்னால் ஹீரோவாக நடிக்கமுடியாமல் போக அந்த வாய்ப்பை சிரஞ்சீவிக்கு கொடுத்தவர். ஆனால், இவர் ஆந்திரா போனபோது நிலைமை தலைகீழாக இருந்தது. பெரிய ஹீரோவாக இருந்த சிரஞ்சீவி தான் நடிக்கும் படங்களில் சுதாருக்கு வாய்ப்பு கொடுத்தார்.

எப்படியாவது நடிக்க வேண்டும் என்கிற உத்வேகத்தில் கிடைக்கும் வேடங்களில் நடித்த சுதாகர் ஒருகட்டத்தில் காமெடி வில்லனாக நடித்து கோமாளியாகவே மாறினார். ரஜினி நடித்த அதிசயப்பிறவி படத்தில் கூட அப்படித்தான் நடித்திருப்பார். 80களில் பெண்களின் கனவு நாயகனாக இருந்தவர் 90களில் தெலுங்கு படங்களில் கோமாளியாக மாறினார். இறுதியில், குடிப்பழக்கம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மூளையில் பாதிப்பு ஏற்பட்டு கோமா நிலைக்கு பின் மீண்டார்.

இதையும் படிங்க: ராதிகாதான் ஹீரோயினா?… வேண்டவே வேண்டாம்… கெத்து காட்டிய பாக்யராஜ்… ஆனா காரணமே வேற!

google news
Continue Reading

More in Cinema History

To Top