சினிமாவுக்கென்றே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்களில் மிகவும் முக்கியமானவர் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான பாலு மகேந்திரா. பழங்காலத்தில் இருந்த சினிமா அணுகுமுறைகளை காலத்திற்கு ஏற்றவாறு சினிமாவின் தரத்தை உயர்த்திய படைப்பாளிகளில் மிகவும் குறிப்பிடத்தக்கவர். இலங்கையைச் சேர்ந்த பாலு மகேந்திரா பல சர்வதேச படங்களை இந்திய கிளாசிக் படங்களை தொடர்ந்து பார்த்து சினிமாவின் மீது மிகுந்த காதல் கொண்டவராக மாறினார் .
பாலு மகேந்திரா முறையாக திரைப்படக் கல்லூரியில் பயின்று மலையாள படத்தின் மூலம் முதன் முதலில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அவர் அறிமுகமானது ஒளிப்பதிவாளராகத்தான் .ஏகப்பட்ட படங்களில் தன்னுடைய கேமரா மூலம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தவர்.
தமிழ் மொழிக்கு முன்னாடி தெலுங்கு மலையாளம் போன்ற படங்களில் பணிபுரிந்த பாலு மகேந்திரா தமிழில் முள்ளும் மலரும் என்ற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார் .அதற்கு அடுத்த வருடமே அழியாத கோலங்கள் என்ற படத்தில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தார்.
ஒளிப்பதிவாளராக இருந்த பாலு மகேந்திரா எப்படி இயக்குனர் ஆனார் என்பதைப் பற்றிய ஒரு சுவாரஸ்ய பின்னணி சம்பவம் இருக்கின்றது. அதாவது அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது தன்னுடைய ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் சுற்றுலா சென்றாராம்.
அப்போது அங்கு ஒரு இடத்தில் ஒரு ஆங்கில படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்ததாம். அதைப் பார்க்க மாணவர்கள் அனைவரும் தன்னுடைய ஆசிரியர்களுடன் சென்றனர். அதை கவனித்துக் கொண்டிருந்த பாலு மகேந்திரா திடீரென ஒருவரின் குரலைக் கேட்டு திரும்பினாராம். அவர் அந்தப் படத்தின் இயக்குனர் .அத்தனை பேர் கூடியிருந்த அந்த இடத்தில் ரெயின் என்ற சொன்னதும் திடீரென மழை பெய்ய ஆரம்பித்து விட்டதாம்.
அதை கவனித்துக் கொண்டிருந்த பாலு மகேந்திராவிற்கு அப்போதுதான் இயக்குனராக வேண்டும் என்ற எண்ணம் பிறந்ததாம். அதாவது ஒருவர் ரெயின் என்று சொன்னதும் அதை உள்வாங்கிக் கொண்டு அங்கு கூடி இருந்த டெக்னீசியன்கள் உடனே மழையை வரவழைத்து விட்டனர். அப்போ அந்த ஒருவரின் கமெண்ட் ஒட்டுமொத்த பட குழுவினரையும் ஆட்டி படைக்கிறது .அதேபோல நாமும் இருக்க வேண்டும் என்று மகேந்திராவிற்கு தோன்றியதாம். இந்த சம்பவம் தான் அவரை இயக்குனர் ஆக்கியது என்று பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் கூறினார்.
இதையும் படிங்க : ‘தவசி’ படத்தில் நடிக்க மறுத்த சௌந்தர்யா! – கேப்டன் செய்த காரியம்.. காலடியில் விழுந்த அம்மணி
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…