எவ்ளோ பிரச்சினை வந்தாலும் சமந்தா மாதிரி இருங்கப்பா.. வைரலாகும் வீடியோ

by Rohini |
samantha
X

samantha

Actress Samantha: தென்னிந்திய சினிமா உலகில் ஒரு டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் இவர் தான் இப்போது நம்பர் ஒன் நடிகை. அதுவும் திருமணத்திற்கு பிறகு சமந்தாவின் மார்க்கெட் அதிக அளவு உயர்ந்து இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

அவருக்கு என ஏகப்பட்ட ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றனர். என்னதான் திரை உலகில் ஒரு உச்சம் தொட்ட நடிகையாக சமந்தா வலம் வந்தாலும் அவருடைய சொந்த வாழ்க்கை என்று பார்க்கும் பொழுது ஏகப்பட்ட மேடு பள்ளங்களை கடந்து தான் வந்திருக்கிறார்.

இதையும் படிங்க: இதுவரை வந்ததிலே இதுதான் செம ஹாட்டு!.. தர லோக்கலா இறங்கி காட்டும் ஆண்ட்ரியா!…

ஆரம்பத்திலேயே இது சினிமாவுக்கான முகம் இல்லை என்று விமர்சித்து பல பட வாய்ப்புகள் இவர் கைவிட்டு போயிருக்கின்றன. அப்படி இருந்தும் தொடர்ந்து தனது கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் இந்த அளவு ஒரு பெரிய அந்தஸ்தை அடைந்திருக்கிறார் சமந்தா.

திருமண வாழ்க்கையில் நடந்த பிரச்சனை அனைவருக்குமே தெரியும். அதிலிருந்து அவர் மீண்டு வரவே சில காலம் ஆனது. அதை பல மேடைகளில் அவர் முகம் வெளிப்படுத்தியது. அதன் பிறகு மையோசிட்டிஸ் என்ற சரும நோய் பிரச்சனை. அது இன்று வரை அவரை தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.

இதையும் படிங்க: தேர்தலுக்குப் பிறகு விஜய் மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு இருக்கா? அதுதான் அவரோட பிளானா?

இப்படி எல்லா சோகங்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் இன்னும் அதே ஒரு புன்முகத்துடன் அனைவரையும் எதிர்கொண்டு வருகிறார். இந்த நிலையில் சமந்தா சம்பந்தப்பட்ட ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

அதில் அவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து டென்னிஸ் விளையாடுகிறார். ஆனால் அந்த வீடியோவில் சமந்தாவை பார்க்கும் பொழுது எத்தனை சோகங்கள் இருந்தாலும் அதை எல்லாம் மறைத்து இந்த அளவுக்கு ஒருத்தர் சந்தோஷமாக இருக்க முடியுமா என ஆச்சரியத்துடன் பார்க்க வைத்திருக்கிறார். இதுவே மற்றவர்களுக்கான ஒரு இன்ஸ்பிரேஷன் வீடியோவாகவும் அமைந்திருக்கிறது.

இதையும் படிங்க: கோலிவுட்டின் மாஸ் ஹிட் படங்கள்… விஜய் நோ சொன்ன பெத்த லிஸ்ட்.. மிஸ் பண்ணிட்டீங்களே தளபதி…

இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/C_NIQV-ypjx/?utm_source=ig_web_copy_link

Next Story