Connect with us

Cinema History

நாவலை சினிமாவா எடுக்கும்போது என்னென்ன சவால்கள் இருந்தன? சொல்கிறார் மணிரத்னம்

கல்கியின் ரசிகன். முதன் முதலா பெரிய தாக்கத்தை எனக்குள் ஏற்படுத்திய எழுத்தாளர் கல்கி தான். அவருடைய பொன்னியின் செல்வன் நாவலை விடாமல் 5 பாகங்களையும் படித்து முடித்தேன். முதல் பக்கத்தில் இருந்தே அவருடைய எழுத்துக்கள் என்னை கதைக்குள் அழைத்துச் சென்று விட்டன என சிலாகிக்கிறார் இயக்குனர் மணிரத்னம்.

எம்ஜிஆர், கமல் என பெரிய பெரிய ஜாம்பவான்கள் கைவிட்டதை தானெடுத்து வெற்றிகரமாக படமாக்கினார் என்றால் அது எவ்வளவு பெரிய விஷயம். இதற்காக அவர் என்னென்ன சவால்களை சந்தித்தார். எப்படி சாத்தியமாயிற்று என தொடர்ந்து அவர் என்ன சொல்கிறார் என பார்க்கலாமா…

Manirathnam1

நான் முதன் முதலா படிச்ச பெரிய நாவல் கல்கியின் பொன்னியின் செல்வன். 5 பாகங்களும் படிக்க படிக்க சுவாரசியம் குறையாம இருந்தது. ஓவியர் மணியத்தோட ஸ்கெட்ச் ரொம்ப அருமையா இருக்கும். அவரும் நிறைய ரிசர்ச் பண்ணி அந்த காலகட்டத்துல எப்படி இருப்பாங்கன்னு தான் அழகா வரைஞ்சிருப்பாரு.

அவரோட படங்கள் இல்லாம பொன்னியின் செல்வன் கதையைப் படிக்க முடியாது. ஆழ்வார்க்கடியான்னா இப்படி தான் இருப்பான். மதில் மேல் தலை மட்டும் தெரியுற மாதிரின்னு பார்த்த உடனே பளிச்சுன்னு அடையாளம் தெரிஞ்சிடும். நந்தினின்னா ஒரு ஆண்டாள் கொண்டை தேவைப்படுது.

Ishwaryarai as Nandini in PS-1

அதெல்லாம் அவரு டிஃபைன் பண்ணிக் கொடுத்துட்டாரு. அதோட பேஸ் தாண்டி போகல. ஆனா அதுல இருந்து வர்ற கிளை. நாவல்ல 5 பாகங்கள்ல சொல்ற விஷயத்தை சினிமாவுல 2 பாகமா எடுத்துருக்கோம். அதுக்கு கொஞ்சம் தியாகம் பண்ண வேண்டியிருந்தது. இதெல்லாம் எடுத்தது தெரியாம இருக்கணும். கொஞ்சம் ஃப்ளோ ஒரே மாதிரி இருக்கணும்கறதுக்காக அங்கங்க பாலங்கள் கட்டியிருக்கோம்.

நாவல்ல சொல்லும் போது கேரக்டரைப் பற்றி கிளியரா சொல்லிடலாம். கேரக்டரோட மனசுல என்ன ஓடுதுன்னு சொல்லிரலாம். வந்தியத்தேவன் நந்தினியைப் பார்க்கும்போது என்ன நினைச்சாரு…குந்தவையைப் பார்க்கும் போது என்ன நினைச்சாருன்னு ஒரு 3 பக்கம் 4 பக்கத்தில சொல்லிடலாம். சினிமாவுல சொல்லும்போது அந்த அட்வான்டேஜ் கிடையாது.

சோ…சுந்தரச்சோழன் வரும்போதே நமக்குத் தெரியணும். முதன்முறையா பார்க்கும்போது நமக்கு என்ன தெரியணும். அவரு நோய்வாய்ப்பட்டுருக்காரு. ஒரு எம்பரரோட திங்கிங். அது வந்து முதல் காட்சியிலேயே வெளிய வரணும். அதுக்கு தேவைப்படுற சிலது எல்லாம் கொண்டு வர்றது அவசியம்.

Thrisha

அதே மாதிரி குந்தவை ரொம்ப புத்திசாலி. சோழ சாம்ராஜ்யத்துக்கு ஒரு தூண் மாதிரி. அவங்க வந்து அரசியல் தெரிஞ்சவங்க. அருண்மொழி வருவதற்கே அவங்க தான் முக்கியமான காரணம். இப்படின்னு நிறைய இடத்துல நிறையய கேரக்டர்ஸ் குந்தவையைப் பற்றி சொல்லிருக்காங்க. கேட்டுத் தெரிஞ்சுக்கறத விட பார்த்துத் தெரிஞ்சுக்கறது ரொம்ப முக்கியம். சோ அந்த சேஞ்சஸ் எல்லாம் எடுத்துருக்கோம்.

கல்கியோட தமிழே வந்து அலங்காரத் தமிழ் இல்ல. பட்…அதுவும் கூட நடிச்சிக்காட்றதுக்கு ஒரு பெர்பார்ம் பண்றது கடினம். ஸ்டேஜ் குவாலிட்டி ரொம்ப ஈசியா வந்துருக்கு. இதை வந்து இன்னிக்கு இருக்குறவங்கக் கூட புரியணும். இரண்டாவது பீரியட நோட் பண்ணனும். ரெண்டும் தேவைப்படுது. ஜெயமோகன் சார் ரொம்ப எளிமையா பண்ணினாரு.

தமிழ் வந்து கிளாசிக்கல் தமிழ் தான். ஆனா குறுகிய வாக்கியங்கள். பெர்பார்ம் பண்றதுக்கு ரொம்ப ஈசியா படப்பிடிப்பு நடத்த இது பெரிய அட்வான்டேஜ். பெர்பார்மன்ஸ்க்கு ஆர்ட்டிஸ்ட்டுக்கு வந்து ரொம்ப ஈசியா இருந்தது. தமிழ்நாட்டுலயே பொன்னியின் செல்வன் மேல பெரிய ஈர்ப்பு…பெரிய கொண்டாட்டம்…இது எனக்கு மட்டுமல்ல.

நிறைய பேரு கேட்காங்க. பண்ணும்போது முதல் பாகம் பார்க்காதவங்களுக்கும் ரெண்டாவது பாகம் புரியணும். அந்த ரெண்டும் தனியாவும் இருக்கணும். சேர்ந்ததுன்னா இன்னும் பெட்டரா இருக்கணும். புக் படிச்சவங்க வந்து நிறைய பேரு இதை வந்து சொந்தமாக்கிட்டாங்க. அதே மாதிரி தான் எனக்கும் வந்து நிறைய பிடிச்சிருந்தது. அதை எல்லாம் சேர்த்து படமாக்கிட்டேன்.

கல்கியோட எழுத்துல காட்சிகளை விவரிக்கும்போது கண்ணுக்கு முன்னால எனக்குத் தெரிஞ்சது. படத்தை எடுக்க முடிஞ்சது ரொம்ப சந்தோஷம். எல்லா கேரக்டரைப் பற்றியும் தெரியும்போது நமக்கு ரொம்ப ஆவல் வரும். கேரக்டர்கள் ரொம்ப அற்புதமா இருக்கும். இந்த நாவலை 4 முறை படிச்சிருக்கேன்.

PS-1 Vikram

எந்த கேரக்டரை எடுத்தாலும் அதை வச்சி படமாக்க முடியும். எல்லாமே ரிச் கேரக்டர் தான். முதல்ல படிக்கும்போது வந்தியத்தேவன் பெரிசா தெரியும். ஆதித்ய கரிகாலனப் பத்தி சொல்லும்போது அவரு மேல ஒரு ஈர்ப்பு வரும். அப்புறம் குந்தவை, நந்தினின்னு எல்லா கேரக்டர்சுமே சூப்பரா இருக்கும். சினிமாவுக்குன்னு எழுதப்பட்ட நாவலா தான் எனக்கு தெரிஞ்சது.

1000 வருஷத்துக்கு முன்னாடி நடந்த சம்பவத்தை வச்சி கதையை எழுதியிருக்காரு. 70 வருஷத்துக்கு முன்னாடி அதை நாவலா எழுதிருக்காரு. ஆனா இந்தக்காலத்துக்கும் அது பொருந்துற மாதிரி தான் இருக்கு. அதுல சொல்லிருக்குற அரசியல் வந்து அன்னைக்கு மட்டுமல்ல.

இன்னைக்கும் அப்படியே பொருந்தும். அதனால இது வந்து நாவல படிச்சவங்களுக்கு மட்டும் தான் ரசிக்க முடியும்கறது இல்ல. எல்லாராலயும் ரசிக்க முடியும். இந்தக் கேரக்டர் ஒவ்வொண்ணும் வந்து கிட்டத்தட்ட ஒவ்வொண்ணும் நமக்குள்ள இருக்கற மாதிரி உணர்வு இருக்கும். சோ அதனால எனக்கு இப்போ எடுபடுமாங்கற சந்தேகமே இல்ல. டெஃபனைட்டா இது வந்து இன்னைக்கு ஆடியன்சுக்கும் ரீச்சாகும்.

google news
Continue Reading

More in Cinema History

To Top