Connect with us
MGR23

Cinema History

எம்.ஜி.ஆரின் சூப்பர்ஹிட் தத்துவ பாடல் உருவானது இப்படித்தான்!.. இவ்ளோ நடந்திருக்கா!..

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பாடல்களை எடுத்துக்கொண்டால், தத்துவ பாடல்கள், காதல் பாடல்கள் என இருவகையாக பிரிக்கலாம். அவற்றில் தத்துவப்பாடலான நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி பாடல் உருவானது எப்படி என்று பார்ப்போமா…

வசனகர்த்தா ஆரூர்தாஸ் சிவாஜியிடம் ஒரு கதை சொன்னாராம். அந்தக்கதை சிவாஜிக்குப் பிடித்துப் போக தனது பிலிம்ஸிலேயே தயாரிக்கலாம் என்றார்.

அதே சமயம் எம்ஆர்.ராதா வாசு என்ற தயாரிப்பாளருக்கு பைனான்ஸ் செய்ய எம்ஜிஆரை வைத்து கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் படம் தயாரிக்க இருந்தார். ஆரூர்தாஸை அழைத்து கதை இருந்தால் சொல்லுங்க என்றார். ஆரூர்தாஸ் சிவாஜியிடம் சொன்ன கதையை மரியாதைக்காக எம்ஜிஆரிடமும் சொன்னாராம்.

MGR, Vaali

MGR, Vaali

அந்தக்கதை எம்ஜிஆருக்குப் பிடித்துப் போனது. சிவாஜிக்கு சொன்ன கதை தான் எம்ஜிஆர் நடித்த பெற்றால் தான் பிள்ளையா? அதே படத்தில் ஒரு பாடல் காட்சியில் வாலி எழுதி எம்.எஸ்.வி. இசையில் சீர்காழி கோவிந்தராஜன் பாடி இருந்தனர். அந்தப் பாடலை தங்கவேலுவும், சௌகார் ஜானகியும் பொம்மை வைத்து விளையாடுவதைப் போல எடுத்து விட்டார்கள்.

பொதுவாக எம்ஜிஆர் படத்தில் அவருக்குத் தெரியாமல் எதுவும் நடக்காது. ஆனால் இந்த விஷயம் எம்ஜிஆருக்குத் தெரியாது. இந்த விஷயம் தெரிந்ததும் எம்ஜிஆர் வாலியைக் கூப்பிட்டு, கிருஷ்ணன் பஞ்சு எனக்குப் புதியவர்கள்.

அவர்களுக்குத் தெரியாமல் போனால் உனக்கு என்ன ஆச்சு என சத்தம் போடுவார். உடனே அந்தப் பாடலை டிஎம்எஸ்சை பாடவைத்து அந்தப் பாடலில் தான் நடித்தார். அந்தப் பாடல் தான் நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி பாடல்.

 

google news
Continue Reading

More in Cinema History

To Top