நான் நடிக்க மாட்டேன்.. அவனை நடிக்க வை!. கமல் படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி...

kamal sivaji
1996ல் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியான படம் அவ்வை சண்முகி. கமலுக்கு ஜோடியாக மீனா நடித்து அசத்தியிருப்பார்.. படத்தில் ஹீரா, ரமேஷ் அரவிந்த், நாகேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. படத்திற்கு காமெடி பறக்க கதை, வசனம் எழுதியவர் கிரேசி மோகன்.
கமல் மாமியாக நடித்து அசத்திய படம் அவ்வை சண்முகி. கமல் அச்சு அசல் பெண் வேடத்தில் தத்ரூபமாக மேக் அப் போட்டு நடித்து இருந்தார். இது தாய்மார்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

Kamal Manivannan
அவ்வை சண்முகி உருவான காலகட்டத்தில் மணிவண்ணன் பிரபலமான நடிகராக இருந்தார். அப்போது அவர் இல்லாத படங்களே இல்லை என்று இருந்தது. எந்தப் பாத்திரத்தை ஏற்று நடித்தாலும் அதை அனாயசமாக நடித்து வெளுத்து வாங்குவார் மணிவண்ணன். அதன் காரணமாகத் தான் அவ்வை சண்முகியில் மணிவண்ணனை நடிக்க வைத்தார் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார்.
அதே போல நாசர், டெல்லிகணேஷ் இவர்களை எல்லாம் கமல்ஹாசனின் கம்பெனி ஆர்டிஸ்ட்னே சொல்லலாம். அவரது எல்லாப் படங்களிலுமே ஏறக்குறைய இவர்கள் நடித்திருப்பார்கள். இந்தப்படத்தில் ஜெமினிகணேசன் நடித்து இருப்பார். அதுதான் கொஞ்சம் வித்தியாசமான சம்பவமாக அமைந்தது. அந்தக் கதாபாத்திரத்தில் ஜெமினிகணேசனை நடிக்க வைக்கணும்னு கேஎஸ்.ரவிகுமார் நடிக்கவே இல்லை.
அந்த சாய்ஸாக சிவாஜி தான் இருந்தாராம். அப்போது அவரது உடல்நலம் சரியில்லாமல் இருந்ததாம். அதனால் அவரால் நடிக்க முடியவில்லையாம். இந்தக் கதாபாத்திரத்தைப் பொருத்தவரை ஜெமினிகணேசன் நடித்தால் ரொம்ப நல்லாருக்கும்னு யோசனை சொன்னாராம் சிவாஜி. அதனால் தான் அந்தப் படத்தில் ஜெமினிகணேசனை நடிக்க வைத்தாராம் கே.எஸ்.ரவிகுமார். ஜெமினிகணேசன் அந்தக் காலத்தில் காதல் மன்னனாக நடித்தது போல இந்த வயதிலும் அப்படியே நடித்து அசத்தியிருப்பார்.