இந்திப்பாடகியையே அழ வைத்த இளையராஜாவின் இசை... அவ்ளோ உருக்கமான பாடலாம்!..

GA Al Il
தமிழ்சினிமாவில் ரஜினி, கமல் என இருபெரும் ஜாம்பவான்கள் போட்டிப் போட்டு நடித்துக் கொண்டு இருந்தனர். இவர்களுக்கு மத்தியில் போட்டியாக களம் இறங்கியவர் ராமராஜன். இவரோட படம் இறங்கினால் ரஜினியும், கமலுமே பயப்படுவார்களாம். இவரது படங்களில் எங்க ஊரு பாட்டுக்காரன் முக்கியமான படம். இந்தப் படத்தில் இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்துமே அருமை.
கணவன் பக்கத்தில் இருந்தும் தனக்கும் அவருக்கும் சுமூகமான உறவு இல்லையே என்ற ஏக்கத்தில் ஒரு பாடல் பாடுவாள். அதுதான் செண்பகமே செண்பகமே என்ற பாடல். அதை ஆஷா போஸ்லே பாடியிருப்பார். இந்தப் பாடலுக்காக இதை எழுதிய கங்கை அமரன் அண்ணன் இளையராஜாவிடம் சென்றார். அண்ணே இந்தப் பாடல் 3 இடத்துல வருது. மெட்டைப் போட்டுக் கொடு என்றார். சரின்னு போட்டுக் கொடுத்தார்.
அதில் மேற்கண்ட சோகமான சூழலில் அந்தப் பாடல் வரும்போது அதை ஆஷாபோன்ஸ்லேவைக் கொண்டு பாடவைக்கலாம் என்றார். இளையராஜாவுக்கு ஒரு சந்தேகம். இது கிராமத்துப் பாடல். இதற்கு எதற்கு ஆஷா போன்ஸ்லே என்று கேட்கிறார்.
அதற்கு ஏற்கனவே அவங்க பாட்டுப் பாடியிருக்காங்கள்ல என்கிறார். அதாவது புதுப்பாட்டுப் படத்தில எங்க ஊரு காதலப் பத்தி என்னா நினைக்கிற என்ற பாடல். அதில் இளையராஜாவுடன் ஆஷா போன்ஸ்லே பாடியிருப்பார்.
அதைப் பற்றி கங்கை அமரன் சொல்லவும் இளையராஜா சொல்கிறார். அது பாட்டு வேறப்பா. அது தப்பும் தவறுமா தமிழை உச்சரிக்கக்கூடிய பொண்ணுக்கு பாடுற பாட்டு. அவங்களுக்குத் தமிழ் தெரியாது. அவங்க எப்படி பாடினாலும் சரியா இருக்கும்.

EOP
உனக்கு எதுக்குய்யா இந்தப் படத்துல ஆஷா போஸ்லேன்னு கேட்கிறார் இளையராஜா. இல்லண்ணே என் படத்துல அவங்க பாடணும்னு விடாப்பிடியாக சொல்கிறார் கங்கை அமரன்.
கடைசியாக இளையராஜாவும் சம்மதித்து விடுகிறார். மறுநாள் ஆஷாபோன்ஸ்லே ரெகார்டிங் தியேட்டருக்கு வருகிறார். அங்கு கங்கை அமரன் ஆஷாபோன்ஸ்லேக்கு பாட்டைச் சொல்லிக் கொடுக்கிறார். இவருக்கு இந்தி தெரியாது. அவருக்கு தமிழ் தெரியாது.
இவர் செண்பகமே செண்பகமே என பாடுகிறார். அவரோ செம்புகமே செம்புகமே எனப் பாடுகிறார். இவர் எவ்வளவோ சொல்லி செண்பகமே என திருத்துகிறார். ஆனால் அவரோ செம்புகமே தான் சொல்கிறார்.
பக்கத்தில் ராஜாவோட உதவியாளர் கல்யாணம் என்பவர் இருந்தார். அவருக்கு இந்தி தெரியும். அவர் ஆஷாவிடம் இதைப் புரிய வைக்க அப்புறம் பாடல் ரெடியானது. இந்தப் பாடலில் முழுக்க முழுக்க பெண்ணோட ஏக்கத்தை உணர்வுகளுக்குள் கொண்டு வரணும். அதுக்காக ஆஷாவோட குரலுக்குப் பொருந்துற மாதிரியான சின்ன சின்ன இசைகளை ஹம்மிங்காக இளையராஜா கொடுத்திருப்பார். செனாய், புல்லாங்குழல் கருவிகளை அழகாக வாசித்திருப்பார்.
ஆஷாபோன்ஸ்லே பாடி முடித்ததும் இந்தப் பாட்டை முழுமையாக மிக்ஸ் பண்ணுங்க. நான் கேட்டுட்டுப் போறேன்னு ராஜா சாருக்கு பக்கத்துலயே நின்னுக்கிட்டு இருக்கிறார். கடைசியில் முழுமையாகப் பாடலைக் கேட்டதும் ஆஷா போஸ்லேயின் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது.
1987ல் கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான படம் எங்க ஊரு பாட்டுக்காரன். ராமராஜன், ரேகா நடிப்பில் பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்ட படம். முழுக்க முழுக்க டவுசரோடு ராமராஜன் நடித்த படம். பாடல்களை எழுதியவர் கங்கை அமரன். இசை அமைத்தவர் இசைஞானி இளையராஜா. பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.