சம்சாரம் அது மின்சாரம் உருவான கதை...வெற்றிவிழாவில் எம்ஜிஆர் கொடுத்த கேடயம்!
விசுவின் இயக்கத்தில் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த மாபெரும் வெற்றிப்படம் சம்சாரம் அது மின்சாரம். இந்தப்படம் உருவான வரலாறு சுவாரசியமானது. அதைப் பற்றி இப்போது பார்ப்போம்.
விசு ஒருமுறை ஏவிஎம் சரவணனிடம் தனக்கு ஒரு படவாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறார். அதற்கு அவர் தருகிறேன். ஆனால் நீங்க எனக்கென தனியாகப் படம் பண்ண வேண்டும்.
படம் பூஜை போட்டதிலிருந்து சென்சார் சர்டிபிகேட் வாங்கி படத்தைத் தரும் வரை எந்த விதமான கமிட்மெண்டுடனும் இருக்கக்கூடாது என்று நிபந்தனை போட்டார். இதைக் கேட்டதும் விசு சென்று விட்டார்.
கொஞ்ச காலம் போனதும் மீண்டும் விசு ஏவிஎம் சரவணனிடம் வந்தார். சார் நான் இப்போ ப்ரீயா இருக்கேன். உங்களுக்குப் படம் பண்ணத் தயார். ஆனால் இப்ப எனக்கு மார்க்கெட் இல்ல...பரவாயில்லையா என கேட்டுள்ளார். அதற்கு சரவணன், மார்க்கெட் பற்றி எனக்கு கவலையில்லை. கொடுத்த வாக்கை நான் நிச்சயம் காப்பாற்றுவேன். எனக்குப் படம் பண்ணுங்க. கதையைச் சொல்லுங்கன்னு கேட்டார்.
அன்று முதல் தினமும் ஒரு கதையை விசு சொல்ல எல்லாம் ரிஜெக்டாகிக் கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் விசுவிற்கே சலிப்பு வந்துவிட்டது. சான்ஸ் தர இஷ்டம் இலலேன்னா சொல்லிடுங்க...சார்..னு சொல்லிவிட்டார்.
நான் உங்களிடம் இருந்து குடும்பம் ஒரு கதம்பம் மாதிரி நீட்டா ஒரு பேமிலி ஸ்டோரியா எதிர்பார்க்கிறேன் என்றார் சரவணன். அதன் பின் ஒருநாள் விசு கதையோடு வந்தார். அவர் சொல்ல சொல்ல ஓகே..ரொம்ப அருமை. எக்சலெண்ட் விசு. இதை ஏன் முதல்லயே எங்கிட்ட சொல்ல வில்லைன்னு கேட்டார் சரவணன்.
இது எனது உறவுக்குக் கை கொடுப்போம் என்ற நாடகத்தின் கதை. இதை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படமாக எடுத்தார். ஒய்.ஜி.மகேந்திரன் இயக்கினார். ஆனால் படம் ஓடவில்லை. ஓடாத படத்தின் கதையை எப்படி சொல்ல என்று தயங்கினேன் என்றார் விசு.
கதை எனக்குப் பிடிச்சிருக்கு விசு. படம் ஓடலைங்கறது நல்லதாப் போச்சு. நாம் புதுசாக எடுப்போம் என்று அந்தக் கதையை கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் இருந்து வாங்கினார் சரவணன்.
பின்னர் விசுவுடன் கதை பற்றி விவாதித்தார் சரவணன். இது முழுக்க முழுக்க மிடில் கிளாஸ் படமாக உள்ளது. இதுல மாஸ் ஏதுமில்லையே என்றார். உடனே காமெடிக்கு மனோரமாவை சேர்க்கச் சொன்னார்.
முதலில் மறுத்த விசு பின்னர் அதை ஒப்புக்கொண்டு மனோரமாவுக்கான காட்சிகளை சேர்த்து மீண்டும் திரைக்கதையை எழுதினார். ரொம்பவும் பெர்பக்டாக வந்திருந்தது.
அப்புறம் என்ன டைட்டில் என்று விவாதம் நடந்தது. அப்போது விசு ஒரு பேப்பரில் இதற்காக 12 டைட்டில்களை எழுதி வைத்திருந்தார். அதை ஒவ்வொன்றாக படித்துப் பார்த்தார் சரவணன். இதுல உங்களுக்கு எது பிடிச்சதுன்னு கேட்டார். அதற்கு விசு எனக்கு எல்லாமே பிடிச்சது தான் என்றார். அப்போது சரவணனைக் கவர்ந்த தலைப்பு சம்சாரம் அது மின்சாரம்.
இந்தப்படத்திற்காக ஒரு வீட்டையேக் கட்டி கொடுத்தாராம் ஏவிஎம் சரவணன். இப்போது அது சென்டிமென்ட் வீடாகி விட்டதாம். இந்த வீட்டில் சூட்டிங் எடுப்பது ரஜினிக்கு பிடித்தமான விஷயமாம்.
படத்தில் கிளைமாக்ஸ் தெறிக்கவிட்டது. ரகுவரன், லட்சுமி, கமலா காமேஷ், கிஷ்மு, மனோரமா என அனைவரது நடிப்பும் சூப்பரோ சூப்பர் என்று சொல்லும் அளவு இருந்தது. குறிப்பாக விசுவின் இயக்கம் அதிலும் வசனம் செம மாஸ் என்கிற அளவில் இருந்தது.
பட்டி தொட்டிகளில் பல விழாக்களுக்கு மறக்காமல் ஒலிபரப்பும் வசனம் சம்சாரம் அது மின்சாரமாகிவிட்டது என்றால் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். இந்தப்படத்தின் வெள்ளிவிழாவுக்கு அப்போதைய முதல்வர் எம்ஜிஆரே அனைவருக்கும் கேடயம் வழங்கினார்.
இந்தப்படத்திற்கு தங்கத்தாமரை விருதை 1987ல் அப்போதைய ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் வழங்கினார். தங்கத்தாமரை விருது பெற்ற முதல் தமிழ்ப்படமும் இதுதான்.!