Indian 2
1996ல் ஷங்கர் இயக்கத்தில் வந்து தமிழ் சினிமா உலகையே புரட்டிப் போட்ட படம் இந்தியன். கமல் – ஷங்கர் கூட்டணியில் அசத்தலாக வந்தது. அந்தப் படத்தில் கமல் முதலில் நடிப்பதற்கே ஒப்புக்கொள்ளவில்லையாம். அப்புறம் எப்படி இந்த அதிசயம் நடந்தது என்று பார்க்கலாமா…
இந்தியன்2 படத்துல அனிருத் தாத்தா வாராருன்னு போட்ட பாடல் பலரது கவனத்தையும் பெற்றது. இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் இயக்குனர் ஷங்கர் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டு சொன்னார்.
‘தாத்தா வாராரு’ன்னு அனிருத் இந்தப் படத்துக்காக முதல்ல சாங் போட்டாரு. அது படம் ஆரம்பிக்கும்போது போட ஆரம்பிச்சாரு. இப்ப தான் முடிச்சுக் கொடுத்தாரு. அந்தப் படமே நாலஞ்சு வருஷமா எடுத்துருக்காங்க என்கிறார். இந்த நிகழ்ச்சி பெரிய பரபரப்பு இல்லாம முடிஞ்சது என்கிறார் வலைப்பேச்சு அந்தனன்.
இந்த விழாவிற்கு கமல் வரும்போது பாகிஸ்தானில் பிரியாணி கடை வச்சிருக்கிற பாய் மாதிரி வந்து இருக்கிறார். இன்னும் நல்ல காஸ்டியூமை ரெடி பண்ணிருக்கலாம். நெட்டிசன்கள் பலரும் கமல் சுடிதார்லாம் போட்டு வர்றாரேன்னு கமெண்ட் செய்தார்களாம்.
கமல் பேசும்போது இந்தியன் படத்திற்குள் எப்படி வந்தார் என்று சொன்னார். முதல்ல இந்தக் கதையை ஷங்கர் சொல்லும்போது எனக்கு நிறைய முரண்பாடு இருந்தது நான் வேணாம்னு சொல்லிட்டேன். அப்புறம் வேறொரு ஹீரோவை வச்சி ஹிட் கொடுத்துட்டு மறுபடியும் அதே கதையோட வந்தாரு.
நான் அப்பவும் வேணாம்னு சொல்லிட்டேன். அப்புறம் சிவாஜிக்கிட்ட போய் இப்படி ஷங்கர் வந்து எங்கிட்ட ஒரு கதையை சொன்னாரு. நான் வேணான்னு சொல்லிட்டேன்னு கமல் சொன்னாராம். அதற்கு சிவாஜி தான் இதுல நடின்னு சொன்னாராம். அதனால தான் இந்தியன் படத்துல கமல் நடிச்சாராம்.
மேற்கண்டவாறு வலைப்பேச்சு அந்தனன் தெரிவித்துள்ளார்.
அமராவதி திரைப்படம்…
விஜய் நடிப்பில்…
விஜய் நடிப்பில்…
விஜயின் ஜனநாயகன்…
விஜய் நடித்துள்ள…