நடிகைகள் விஷயத்தில் கவுண்டமணி அப்படிபட்டவரா?!...சீக்ரெட்டை உடைத்த நடிகை...

by Akhilan |   ( Updated:2022-09-25 14:40:46  )
நடிகைகள் விஷயத்தில் கவுண்டமணி அப்படிபட்டவரா?!...சீக்ரெட்டை உடைத்த நடிகை...
X

சினிமா வட்டாரத்தில் அட்ஜஸ்ட்மெண்ட் என்பது சாதாரணமாகவே இருந்து வருகிறது. இதற்கு எதிராக சிலர் குரல் கொடுத்தால் பலரால் அதற்கு அடங்கி தான் செல்ல முடிகிறது. நடிப்பு வாய்ப்பு வேண்டும் எனக் கேட்டு வரும் எல்லா நடிகைகளுமே இதை ஃபேஸ் செய்து இருப்பார்கள். தவறான தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தங்கள் ஆசைக்கு இணங்க கூறி நடிகைகளை வற்புறுத்துவது நடந்து கொண்டு தான் இருக்கிறது.

சமீபகாலமாக, மி டூ என்ற ஹேஸ்டேக்கின் வழியே நடிகைகள் பலர் தங்களுக்கு நேர்ந்த பிரச்சனைகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் சினிமா வட்டாரத்தில் சிலர் தங்கள் பெயர் வந்து விடுமா என ஐயத்திலே இருந்து வருவதும் உண்மை தான். இதில் குறிப்பாக ஸ்ரீ ரெட்டி தெலுங்கு உலகின் பல முன்னணி பிரபலங்களை தோலுரித்தார். அவரை தொடர்ந்து, பாடகி சுசித்ரா ட்விட்டர் கணக்கின் மூலம் பல கோலிவுட்டினரின் அந்தரங்க படங்களும் வெளியாகியது.

இதையும் படிங்க: கவுண்டமணியை நம்ப வைத்து ஏமாற்றிய சிம்பு.! அந்த சம்பவத்தால் சிவகார்த்திகேயனுக்கு சிக்கல்…

இந்நிலையில், காமெடி நடிகர் கவுண்டமணி தன்னுடன் நடித்த நடிகைகளுக்கு தவறாக தொல்லை கொடுத்ததாக கோலிவுட்டில் கிசுகிசுக்கள் வலம் வந்தனர். ஆனால், அவருடன் நடித்த நடிகை வாசுகி நான் அவருடன் இதயவாசல், ரிக்‌ஷா மாமா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கின்றேன். அவர் என்னிடம் அப்படி எதுவும் நடந்து கொண்டது இல்லை எனத் தெரிவித்திருக்கிறார்.

Next Story