பக்கா ஐயங்கார இருந்த என்னை முருக பக்தனாக மாற்றிய சம்பவம்!.. வாலி விபூதி பூசக் காரணம்..
தமிழ் சினிமாவில் கண்ணதாசனுக்கு பிறகு சிறப்புமிக்க கவிஞராக இருந்தவர் கவிஞர் வாலி மட்டுமே. பாடல்களில் எதுகை மோனையுடன் பாட்டெழுவதில் வல்லவராக விளங்கினார். வாலிபக் கவிஞன் வாலி என்றே இவரை அழைப்பர்.
திரையிசைப் பாடல்களிலும் சரி, தமிழிலும் சரி ஒரு தனித்துவம் மிக்க கவிஞராக விளங்கினார். தமிழ் மட்டுமில்லாமல் வேறு மொழிகளிலும் பல பாடல்களை எழுதியுள்ளார். கிட்டத்தட்ட 15000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் வாலி.
எம்ஜிஆர் முதல் சிம்பு வரை அனைத்து தலைமுறையினருக்கும் பாட்டெழுதிய வாலிபக் கவிஞன். இவர் எழுதிய முதல் பாடல் அழகர் மலைக் கள்ளன் படத்தில் அமைந்த பாடலாகும். அவருக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் ‘கற்பகம்’. அந்தப் படத்தில் அவர் எழுதிய பாடல்கள் காலத்தால் என்றும் நிலைத்து நிற்பவையாக இருக்கும்.
அவர் ஒரு பேட்டியில் அவரை பற்றியே கூறும்போது தான் எப்படி ஒரு முருக பக்தனாக மாறி்னேன் என்பதை கூறியிருக்கிறார். சுத்த வைஷ்ணவராக இருந்த வாலி ஐயங்கார் குடும்பத்தில் பிறந்தவர்.1948வாக்கில் அவரது தங்கை சிரோஸின் லிவர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தாராம். யூரினை ட்யூப் மூலமாகத் தான் எடுக்க வேண்டியிருந்ததாம்.
இரண்டு முறைக்கு மேல் அப்படி எடுத்தால் பிழைக்க மாட்டார் என்று கூறியிருக்கின்றனர். அதன் பிறகு ஒரு மருத்துவர் ஏதோ ஒரு ஊசியினை செலுத்த பிழைத்துக் கொண்டாராம். அந்த மருத்துவர் பெயர் சுப்பிரமணியம் என்பதாம். அதிலிருந்தே தீவிர முருக பக்தனாக மாறிவிட்டாராம் வாலி. மேலும் அடுத்த வினாடியே இறந்து விடுவார் என்று சொன்ன அவரது தங்கை 85 வயதில் தான் காலமாயிருக்கிறார்.
இதையும் படிங்க : சிவாஜிக்கு அப்புறம் அந்த விஷயத்தில் விஜய் தான் டாப்!.. புகழ்ந்து தள்ளும் பிரபல இயக்குனர்!..
அதன் பிறகு தான் அவர் முருகனுக்காக ஒரு பாட்டெழுத டி.எம். சௌந்தராஜனை வைத்து பாட வைத்திருக்கிறார். அன்று பூச ஆரம்பித்த இந்த விபூதி இறக்கும் தருவாய் வரைக்கும் பூசிக் கொண்டிருந்தாராம்.