Cinema History
ஆளவந்தான் படத்தில் அப்பவே அட்வான்ஸ் டெக்னாலஜியா? அப்படின்னா ஏன் படம் ஓடல?
ஆளவந்தான் படம் 2001ல் மிகப்பிரம்மாண்டமாக பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் களம் கண்டது. ஆனால் ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்தது. படமும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தொழில்நுட்ப ரீதியாக பல புதுமைகள் செய்யப்பட்டு இருந்தன. என்றாலும் ரசிகர்களுக்குத் திருப்தியில்லை. ஆனால் இந்தப் படம் இக்காலத்திற்குப் பொருந்தும் என்கிறார்கள்.
தற்போது வரும் டிசம்பர் 8ம் தேதி தமிழகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் ரீ ரீலீஸ் ஆக உள்ளது. சமீபத்தில் இதற்காக நேற்று படக்குழுவினர் நந்தகுமார் கேரக்டரில் வந்த கடவுள் பாதி மிருகம் பாதி என்ற பாடலை வெளியிட்டனர். இது குறித்து பிரபல யூடியூபர் ராசி அழகப்பன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
வரும்போது பெரிய எதிர்பார்ப்பு. ஏன்னா நந்தகுமார் என்ற கேரக்டர் பயங்கர வெயிட். அதுக்காக கமல் சார் என்ன என்னவெல்லாமோ சாப்பிட்டு ஒரு நாளைக்கு 3 மணி நேரம் உடற்பயிற்சி செய்து அதுக்குன்னு பயிற்சியாளர்கள் எல்லாம் வச்சி பயிற்சி செய்தார். வீட்டு மேல தாவி, கூரை மேல தாவின்னு பலவித வேலைகள் செஞ்சாரு. இப்படி வந்து ஹாலிவுட்ல கூட பண்ணமாட்டாங்கன்னு பேசுனாங்க.
அதுக்கு அப்படியோ ஆப்போசிட்டா ராணுவ அதிிகாரி விஜயகுமாராக கமல் இன்னொரு வேடத்துல நடிச்சிருக்காரு. அவரோட மனைவி ரவீனா டாண்டன். இவர் கல்யாணம் பண்ணிட்டு வந்த பொண்ணை நந்தகுமார் கொலை பண்ணத் திட்டம் போடுறான். தன்னோட சித்தி தவறா நடந்துக்கிட்டா என்பதற்காக நந்தகுமார் கேரக்டர் சைக்கோவாகி சித்தியைக் கொன்றுடறான்.
எந்தப் பொண்ண பார்த்தாலும் அவனுக்கு சித்தி மாதிரி தான் இருப்பாங்க. உயிரோடு விட்றக்கூடாது. கொன்னுறணும்னு முடிவு பண்ணி தொடர்ச்சியா கொலை பண்றான். அவனை ஜெயில்ல தூக்கிப் போடுறாங்க. அப்புறம் வெளிய வரும்போது ரவீனா டாண்டன பார்க்குறான். இது தன்னோட சித்தி மாதிரி தான் இருக்குது.. கொல்லணும்னு முயற்சி பண்றான். அப்போ ராணுவ அதிகாரி எப்படி தடுக்கிறார்ங்கறது தான் மீதிக்கதை.
படத்துல ஒரு புதுமையை புகுத்திருப்பாங்க. அதாவது சண்டை நடந்துக்கிட்டே இருக்கும். இடையில கார்டூன் வரும். என்னடா சண்டை போடுறாங்களா இல்லையான்னு ஆடியன்ஸ் குழம்பிடுறாங்க. இது வெளிநாடுகளில் உள்ள படங்களில் காட்டப்படுவது தான்.
இது வந்து நம் தமிழ் சினிமாவுக்கு அட்வான்ஸ் டெக்னாலஜி. அதாவது ரொம்ப ரத்தம் தெறிக்கும் வன்முறைக்காட்சிகளை நேரடியாகப் பார்க்கக்கூடாது என்பதற்காக அதை மட்டும் கார்டூனில் காட்டுவாங்க. அது தான் இந்தப் படத்திலும் வரும்.
அப்ப இந்தப் படம் வந்தபோது ஆளவந்தான் அழிக்க வந்தான்னு சொன்னார் கலைப்புலி தாணு. இப்ப பார்க்கும்போது இது இந்தக் காலத்துக்குத் தான் செட்டாகும். அப்படின்னு ரீ ரீலீஸ் பண்றாரு. வெல்லுவான் புகழை அள்ளுவான்கறாரு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சுரேஷ் கிருஷணா இயக்கிய இந்தப் படத்துல மனீஷா கொய்ராலா, பாத்திமா பாபு, அனு ஹாசன். ரியாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். தாயம் என்ற சிறுகதையைத் தழுவி தான் இந்தப் படத்தை எடுத்துருக்காங்க. இந்தியில் அபய் என்ற பெயரில் இந்தப் படம் வெளியானது.