ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் எப்படி இருக்கு? அனிருத் சொன்ன சர்ப்ரைஸ் நியூஸ்!

by Akhilan |   ( Updated:2025-05-03 04:07:33  )
ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் எப்படி இருக்கு? அனிருத் சொன்ன சர்ப்ரைஸ் நியூஸ்!
X

Coolie: ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் தன்னுடைய எமோஜி ரிவியூக்கு முன்னமே வீடியோ மூலம் சொல்லி இருக்கும் சூப்பர் தகவல் இணையத்தில் கசிந்து இருக்கிறது.

தமிழில் சூப்பர் இயக்குனராக இருக்கும் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் கூலி. இப்படம் அவரின் சினிமாட்டிக் யூனிவர்ஸை சாராமல் தனி படமாக அமைய வேண்டும் என்ற கண்டிஷனுடன் தான் ரஜினிகாந்த் லோகேஷுக்கு வாய்ப்பு கொடுத்தார்.

அதனால் படம் வேறு விதத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் அமீர்கான், நாகர்ஜூனா, ஷொபீன் ஷாபீர், சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். படமும் பரபரப்பாக தயாராகி வருகிறது.

இப்படத்தின் ஷூட்டிங் காட்சிகள் வேறு இணையத்தில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது படம் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தினை நெருங்கிவிட்டது. வரும் ஆகஸ்ட் மாதத்தில் படம் ரிலீஸாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்திற்கு ரஜினியின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் தான் இசையமைக்க இருக்கிறார். ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து வேட்டையன், கூலி, ஜெயிலர்2 என தொடர்ச்சியாக ரஜினி நம்பி அனிருத் கையில் கொடுத்து வருகிறார்.

பொதுவாக அனிருத் தன்னுடைய இசையமைப்பில் வெளிவரும் படங்களுக்கு எமோஜி விமர்சனம் செய்வது வழக்கம். அந்த முறையில் தற்போது கூலி ரிலீஸை நெருங்கி வருவதால் அப்படம் குறித்து பேசி இருக்கிறார். நான் கூலி படத்தினை முழுமையாக பார்த்துவிட்டேன்.

படம் நன்றாக வந்து இருக்கிறது. வித்தியாசமான சாயலில் இருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். ஹுக்கும், மனசிலாயோ பாடலினை தொடர்ந்து இந்த கூட்டணியின் மூன்றாவது படம் என்பதால் ஹாட் டிரிக் வெற்றி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பிலும் ரசிகர்கள் உள்ளனர்.

Next Story