கோப்ரா ஊத்தி மூடிடுச்சு!.. டிமான்டி காலனி 2 தான் ஒன்லி ஹோப்!.. டிரெய்லர் தேறுச்சா இல்லையா?..
டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள், கோப்ரா உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி உள்ள டிமான்டி காலனி 2 படத்தின் டிரெய்லர் வெளியாகி ட்விட்டர் ஹாஷ்டேக் டிரெண்டிங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது.
வம்சம் படத்திற்கு பிறகு அருள்நிதிக்கு ஹிட் அடித்த படம் என்றால் டிமான்டி காலனி தான். ஒரு பேய் வீட்டில் நண்பர்கள் சிலர் சிக்கிக் கொண்டு கடைசியில் அனைவரும் இறந்து ஆவியாகி விடுவது தான் கதை.
இதையும் படிங்க: இதுக்குதான் டைவர்ஸ் ஆச்சா?!.. ரகசியத்தை போட்டுடைத்த சீரியல் நடிகை – அட கொடுமையே!..
அந்த வீட்டில் இருந்து தப்பித்து வெளியே வரும் ஹீரோ அருள்நிதி டீ கடையில் தனது நண்பர்கள் இறந்து விட்டார்கள் என சொல்ல கடைசியில் அவரும் செத்து ஆவியாகித் தான் வெளியே வந்திருக்கிறார் என கிளைமேக்ஸை முடித்து ஹிட் அடித்திருந்தார் அஜய் ஞானமுத்து.
அடுத்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, விஜய்சேதுபதி, அதர்வா, ராஷி கன்னா மற்றும் வில்லனாக பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் நடித்த இமைக்கா நொடிகள் படம் பெரிய வெற்றியை பெற்றது.
இதையும் படிங்க: முதல் மரியாதை பட வாய்ப்பை மிஸ் பண்ணிய ரம்யா கிருஷ்ணன்!.. வட போச்சே!…
அஜய் ஞானமுத்து படங்கள் சூப்பரா இருக்கே நமக்கும் ஒரு வெற்றிக் கிடைக்கும் என நம்பிப் போன விக்ரமுக்கு கோப்ரா படம் மூலம் பெரிய பல்பு கிடைத்து விட்டது.
இந்நிலையில், மீண்டும் தனது ஹிட் ஃபார்முலாவான டிமான்டி காலனியை அஜய் ஞானமுத்து கையில் எடுத்துள்ளார். ஹாரர் படங்கள் என்றாலே டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில் சந்தானம் பண்ணும் காமெடிகளை பார்த்து ரசிகர்கள் சிரித்து வரும் நிலையில், ரியல் ஹாரராக உருவாகி உள்ள டிமான்டி காலனி 2 அஜய் ஞானமுத்துவுக்கும் அருள்நிதிக்கும் வெற்றியைக் கொடுக்கிறதா என்பதை காத்திருந்து பார்ப்போம்.
டிரெய்லரை பொறுத்தவரை மிரட்டலான மேக்கிங் மட்டுமே ஈர்க்கிறது. ஆனால், பார்த்து புளித்துப் போன கதை தான் காட்சிகளாக நகர்வதால் சுவாரஸ்யம் குறைவு தான்.